01

E   |   සි   |  

 திகதி: 2014-10-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

4856/2014: Housing Projects

4856/ ’14

கௌரவ (திருமதி) அனோமா கமகே,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் யாவையென்பதையும்;

           (ii)    தற்போது மேற்படி கருத்திட்டங்களின் கீழ்  கட்டப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி வீடமைப்புக் கருத்திட்டங்களின் கீ்ழ் வீடு பெறுனர்களை தெரிவுசெய்யும் போது பின்பற்றப்பட்ட நடைமுறை யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேலே குறிப்பிடப்பட்ட வீடமைப்புக் கருத்திட்டங்களின் கீழ் வீடு வழங்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) (i) அண்மையில் மக்களுக்கு கையளிக்கப்பட்ட மாளிகாவத்தை வீடமைப்புத் தொகுதியை அதன் முதல் குடியிருப்பாளர்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;

(ii) 2014 ஆம் ஆண்டிற்கான அமைச்சின் வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களின் இலக்குகள் யாவையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-24

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks