01

E   |   සි   |  

 திகதி: 2014-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

4713/2014: Mr.Nazeez - VOP notice

4713/ ’14

கௌரவ மொஹமட் அஸ்லம்,—  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      மத்திய மாகாணத்தில், மாத்தளை கல்வி வலயத்திற்குரிய, மா/துல்லாவ கல்லூரியில் உப ஆசிரியராகச் சேவையாற்றிக்கொண்டிருந்த, திரு. ஏ.எல்.எம். நசீஸ் வெளிநாட்டு லீவு பெறுவதற்காக சமர்ப்பித்திருந்த பொது 126 மாதிரிப் படிவத்திற்கமைய, மாத்தளை, வலயக் கல்விப் பணிப்பாளரின் மா/குருஆ/7/281 ஆம் இலக்க 1989.06.05 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் 1987.04.01 ஆம் திகதி முதல் 1992.03.31 ஆம் திகதி வரை சம்பளமற்ற வெளிநாட்டு லீவு அங்கீகரிக்கப்படுதல் விதந்துரைக்கப்பட்டுள்ளதென்பதையும்; 

(ii) மாத்தளை வலயக் கல்விப் பணிப்பாளர் மா/குருஆ/4/53 ஆம் இலக்க 2007.11.30 ஆம் திகதிய கடிதத்தின் மூலம் திரு. நசீஸின் 15 ஆண்டு கால திருப்திகரமான சேவையைக் கவனத்திற்கொண்டு இவரை மீண்டும் சேவையில் அமர்த்துதல் பொருத்துமாகுமென மத்திய மாகாண கல்விப் பணிப்பாளருக்கு விதந்துரைத்துள்ளார் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) கல்வித் திணைக்களத்தின் உள்ளகத் தவறொன்றினால் பதவி விட்டு நீங்கியமைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமையின் காரணமாக நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள திரு. நசீஸை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு அல்லது ஓய்வுபெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன் ?

கேட்கப்பட்ட திகதி

2014-07-25

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks