01

E   |   සි   |  

 திகதி: 2014-03-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

4629/2014: பலாங்கொடை பெருந்தோட்டக் கம்பனிக் காணிகள் பகிர்வு : விபரம்

4629/ ’13

கெளரவ (திருமதி) தலதா அத்துகோரல,—  பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இரத்தினபுரி புதிய நகர எல்லையினுள் பலாங்கொடை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் காணப்படுகின்ற ஓரளவு காணிகள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் பொருட்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், குறிப்பிட்ட மொத்த காணியின் பரப்பளவு எவ்வளவு;

(iii) பகிர்ந்தளிப்பதற்குள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) இவ்வாறு பகிர்ந்தளிப்பதற்கு உத்தேசமாயுள்ள காணிகளில் ஒரு பர்சஸ் காணியின் மதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவு;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட காணிப் பங்குகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு உத்தேசமாயுள்ள ஒவ்வொரு அரச ஊழியரினதும் பெயர், இவர் இறுதியாக வகித்த பதவி மற்றும் கிடைக்கவுள்ள காணியின் அளவு வெவ்வேறாக எவ்வளவு;

(ii) மேற்படி காணி பெறுனர்களுக்கு மத்தியிலுள்ள குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொருவரினதும் பெயர், மாதாந்த வருமானம் மற்றும் கிடைக்கவுள்ள காணியின் அளவு வெவ்வேறாக யாது;

(iii) உத்தேச காணி பெறுனர்கள் பணம் செலுத்தியிருப்பின், அவ்வாறு பணம் செலுத்தப்பட்ட கணக்கு மற்றும் அக் கணக்கின் இலக்கம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-04

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks