01

E   |   සි   |  

 திகதி: 2014-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4227/2014: Allegations against elected Provincial Councils,Local Govt and Municiple Council Members

4227/ ’13

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை பிரதிநிதிகள், நகர சபை பிரதிநிதிகள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளில் தற்போது, ஊழல், குற்றச்செயல் அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டமை காரணமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) இவர்களின் பெயர்கள், உரித்தான அரசியல் கட்சிகள் மற்றும் இவர்கள் மாகாண சபையில், நகர சபையில் மற்றும் பிரதேச சபையில் வகித்த அல்லது தற்போது வகித்துவருகின்ற பதவிகள் தனித்தனியே யாவை என்பதையும்;

(iii) மேலே குறிப்பிடப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் தற்போது சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(iv) தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிட்டவாறு ஊழல் பேர்வழிகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதன் காரணமாக திட்டமிடப்பட்ட ஊழல்கள், குற்றச் செயல்கள் மற்றும் பலதரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு ஏதுவாயமைகின்றதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஊழல் பேர்வழிகள் மற்றும் குற்றவாளிகள் பிரதேச மற்றும் மாகாண சபை அரசியலில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-20

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks