01

E   |   සි   |  

 திகதி: 2013-11-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3633/2013: Rata Viruwo Talent Star Progamme

3633/ ’13

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மற்றும் நிரல் அமைச்சின் அனுசரணையுடன் தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பான “ரட்டவிருவோ டெலனட் ஸ்டார் ரியலிட்டி” நிகழ்ச்சிக்கு மதிப்பீடு செய்யப்பட்ட பணத் தொகை எவ்வளவு;

(ii) மேற்படி பணத் தொகையில்  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசைக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவு;

(iii) அரச தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கும் போது தனியார் அலைவரிசை ஒன்றுக்கு  அந் நிகழ்ச்சியை வழங்குவதற்கான காரணங்கள் யாவை

என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி நிகழ்ச்சியின் நடுவர்கள் குழுவினரினதும் மற்றும் அறிவிப்பாளர்களாக பணியாற்றியவர்களினதும் பெயர்கள் யாவை;

(ii) இவர்களுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை வெவ்வவேறாக எவ்வளவு;

(iii) வெளிநாடு செல்கின்றபோது அந்த ஒவ்வொரு நபருக்கும் விமான இருக்கைகள் ஒதுக்கப்பட்ட விதம் இருக்கை வகுப்புகளுக்கமைய  வெவ்வேறாக யாது;

(iv) மேற்படி அறிவிப்பாளர்கள் மற்றும் நடுவர்கள் குழு அங்கத்தவர்களுக்கும் தங்குமிட வசதிகளை வழங்கிய  ஹோட்டல்கள் மற்றும் அதற்காக மேற்படி பணியகத்தினால் ஏற்க்கப்பட்ட பணத் தொகைகள் வெவ்வேறாக யாவை

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) மத்திய கிழக்கில்  இலங்கை ஊழியர்கள் முகாம்களில் கஷ்டப்படுகின்றபோது பாரிய செலவில் ‘ரியலிட்டி’ நிகழ்ச்சிகளை நடத்துவது பொருத்தமற்றதென்பதை அவர்  ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-05

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks