01

E   |   සි   |  

 திகதி: 2013-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

3293/2013: ஊடகவியலாளர்களுக்கு நேரும் இடையூறுகள் :அமைச்சர்கள் உபகுழு

3293/ ’12

கௌரவ புத்திக பதிரண,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு நேரிடுகின்ற இடையூறுகள் குறித்து  ஆராய்வதற்காக 2008 ஜூன் மாதத்தில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப அறை இலக்கம் 2/08 இல் இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சரின் தலைமையில் அமைச்சா்களின் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) தற்போது மேற்படி உபகுழு இரத்துச் செய்யப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், இதற்கான காரணங்கள் யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி உபகுழுவின் நடவடிக்கைகளை நடத்திச் சென்ற கட்டிடத்திற்கான வாடகை, தொலைபேசிக் கட்டணப் பட்டியல், மின்சாரக் கட்டணப் பட்டியல் என்பவற்றுக்காக செலவழிக்கப்பட்ட  பணத்தொகை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக யாது;

(ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்ட செலவுகளுக்கு மேலதிகமாக  ஏற்கப்பட்ட ஏனைய  செலவுகளுக்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை வருடாந்த ரீதியில் வெவ்வேறாக எவ்வளவு

என்பதை அவர் குறிப்பிவாரா?

(ஈ) (i) மேற்படி செலவுகளை மேற்கொண்ட அமைச்சுக்கள் மற்றும்  அவற்றுக்கு உரிய செலவுத் தலைப்புக்கள் யாவை;

(ii) மேலே குறிப்பிடப்பட்ட கொடுப்பனவுகள் இதுவரையில் மேற்கொள்ளப் படவில்லையெனின், இக்கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-26

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-04

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks