01

E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0880/2025: 'உருமய' அறுதி உறுதி வழங்குதல்: மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

880/2025

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     2019.01.01 தொடக்கம் 2025.03.31 வரையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் ‘உருமய’ அறுதி உறுதியை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) கடந்த அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி காலப்பகுதியினுள் குறிப்பிட்ட நபர்களுக்கு ‘உருமய’ அறுதி உறுதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;

(iv) ‘உருமய’ அறுதி உறுதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு அந்த உறுதிகள் வழங்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

(v) ஆமெனில், அந்த நபர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்கள் யாவை என்பதையும்;

(vi) அவர்களுக்கு இதுவரை ‘உருமய’ அறுதி உறுதி வழங்கப்படாததற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-11-18

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks