பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
----
கேட்கப்பட்ட திகதி
2024-08-06
கேட்டவர்
கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
5 வது கூட்டத்தொடர்
கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த வினாவுக்கான விடை பின்வருமாறு:
(அ) (i) • வளர்ப்பவர்கள் - 7,144
• ஏற்றுமதியாளர்கள் - 60
• மீன் வளர்ப்பு இடங்கள் - 630
• ஏனைய உதவியாளர்கள் - 140
மொத்தம் - 7,974
(ii)
|
வருடம் |
தொகை அளவு (மெற்றிக் தொன்) |
அலங்கார மீன் ஏற்றுமதி வருமானம் ஏறக்குறைய (ரூ. மில்) |
|
2019 |
548.8 |
2,908.3 |
|
2020 |
456.5 |
2,408.7 |
|
2021 |
1,139.3 |
4,183.6 |
|
2022 |
463.7 |
7,135.5 |
|
2023 |
533.5 |
8,638.1 |
|
2024 (சனவரி முதல் மே வரை) |
240.7 |
3,236.2 |
(iii) • வளர்ப்போருக்குத் தேவையான அலங்கார மீனின் தாய் மீன்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திக்குத் தேவையான வாய்ப்பு களை இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின செய்கை அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய நிலையங்கள்மூலம் பெற்றுக்கொடுத்தல்.
• தொழிலில் ஈடுபடுபவர்களுக்குத் தேவை யான தொழில்நுட்ப அறிவை வழங்கல்.
• உள்ளூர் அலங்கார மீன் கைத்தொழிலை மேம்படுத்த கல்வி மற்றும் வர்த்தக கண் காட்சிகளை நடாத்தல்.
• உள்ளூர் செய்கையாளர்களுக்குத் தேவை யான மீனின உணவை உற்பத்தி செய்து, அவர்களுக்கு வழங்குதல்.
• பாடசாலை மாணவர்களுக்கிடையே அலங் கார மீன் கைத்தொழிலை மேம்படுத்து வதற்குப் பாடசாலை மட்ட அலங்கார மீன் சங்கங்களை ஸ்தாபித்தல்.
• வருடாந்த அனுமதிப்பத்திரம் வழங்குவதன் மூலம் தொழிலை ஒழுங்குபடுத்தல்.
• ஆபத்தான மீன் இறக்குமதியைத் தடுப்பதற் கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
• ஏற்றுமதி செய்வதற்கு ஏற்புடைய மீனின இனப்பெருக்கத்துக்கு நடவடிக்கை எடுத்தல்.
• மாவட்ட மட்டத்தில் அலங்கார மீன் சார்ந்த சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தேவையான சந்தை தொடர்பாடல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கல் போன்ற வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
(ஆ) ஏற்புடையதன்று.
பதில் தேதி
2024-08-06
பதில் அளித்தார்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks