01

E   |   සි   |  

 திகதி: 2023-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

3076/2023: Statistics of Railway Department

3076/2023

கௌரவ அஸோக அபேசிங்ஹ,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தினால் பயன்படுத்தப்படுகின்ற புகையிரத எஞ்ஜின்கள், இயக்கு வலுத் தொகுதிகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

(ii) நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற புகையிரத பயணத் தடவைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) நாளாந்தம் புகையிரதத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) திணைக்களத்தின் நாளாந்த வருமானம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை புகையிரத திணைக்களத்தின் வருடாந்த வருமானம் மற்றும் செலவினம் ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-06-22

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks