01

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

1296/2023: Issues in the Pension of Mr. M. Naimullah

1296/2023

கௌரவ அலி சப்ரி ரஹீம்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 01-802666 எனும் ஓய்வூதிய இலக்கத்தைக் கொண்ட திரு. எம். நயீமுல்லாஹ் அவர்களுக்கு 2021.12.31 ஆம் திகதியுடன்கூடிய திருத்தப்பட்ட ஓய்வூதிய வழங்கல் பத்திரத்திற்கமைவாக கிடைக்கப்பெற வேண்டிய மாதாந்த ஓய்வூதியமானது 31,833.33 ரூபாவாகும் என்பதை அறிவாரா என்பதையும்,

(ii) ஆமெனில், அவருக்கு மேற்படி ஓய்வூதியம் இறுதியாகச் செலுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) அவ்வாறு செலுத்தப்படவில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்தினால் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட වි.චැ.ගි.36/202 ஆம் இலக்கமுடைய 2022.10.30 ஆம் திகதிய கடிதத்தின் 3 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஓய்வூதியத்தை பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(ii) நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியத்தை திரு.எம்.நயீமுல்லாஹ் அவர்களுக்கு வழங்கும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ அலி சப்ரி ரஹீம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks