01

E   |   සි   |  

 திகதி: 2012-01-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1922/2012: Shrines - Shrines in Sri Lanka

1922/ ’11

 

கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,—  பிரதம அமைச்சரும், புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை  இலங்கையில் காணப்பட்ட பெளத்த விகாரைகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) மேற்படி விகாரைகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை என்பதையும்;

(iii) 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையில் காணப்பட்ட விகாரைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) மேற்படி காலப்பகுதியில் விகாராதிபதிகள் இல்லாதிருந்த விகாரைகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெற்வேறாக யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கையில் விகாரைகளில் தய்கியிருந்த துறவறம்பூண்ட பிக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியில் துறவறத்தைக் களைந்த பிக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) 2011ஆம் ஆண்டு சனவரி, பெப்புருவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் துறவறத்தைக் களைந்த பிக்குகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) துறவறத்தைக் களைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விகாரைகளை அபிவிருத்தி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விகாரைகளுக்கு மாதாந்தம் ரூபா 5000.00 பணத் தொகையையாவது வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-01-19

கேட்டவர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks