01

E   |   සි   |  

 திகதி: 2021-03-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1433/2021: License details of Toddy industry

----

கேட்கப்பட்ட திகதி

2021-03-25

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)    (i)      கள்ளு சேகரிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடைமுறையானது, மதுவரி ஆணையாளர் நாயகம் அவர்களின் கட்டளைக்கு உட்பட்டு, அந்தந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான மதுவரி அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதனால், அந்தந்தத் தகவல்களைப் பெற்று அதற்கான பதில்களை வழங்குவதற்கு இரு மாத காலம் தேவைப்படுமென மதுவரி ஆணையாளர் நாயகம் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

      (ii) மேலே (அ)(i) இன் பதில் இதற்கு ஏற்புடையது.

       (iii) மேலே (அ)(i) இன் பதில் இதற்கு ஏற்புடையது.

(ஆ) (i) வினாவின் தன்மைக்கமைய அதற்கான விபரங்கள் மற்றும் தரவுகளை நாடு முழுவதும் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங் களிடமிருந்து பெற்று, அதற்குரிய விடைகளை வழங்குவதற்கு இரு மாத காலம் தேவைப்படும்.

      (ii)  மேலே (ஆ) (i) இன் பதில் இதற்கு ஏற்புடையது.

(இ) (i) கள் சேகரிப்பதற்கு அல்லது வினாகிரி உற்பத்திக்காக வெளியிடப்படும் உரிமங்களின்கீழ் தம்வசம் வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய கள் அளவைத் தீர்மானிப்பது, அந்நிலையத்தில் சீவுவதற்குரிய மரங்களின் எண்ணிக்கையின் பிரகாரமாகும். அதன்படி, நாளாந்தம் மரம் ஒன்றுக்கு 1.5 லீற்றர் என்ற வகையில், கணிக்கப்பட்ட கள்ளின் லீற்றர் அளவைத் தம்வசம் வைத்திருக்கவும் ஏற்றி இறக்கவும் அனுமதி வழங்கப்படும்.

(ii) இந்த அளவானது, ஒவ்வோர் உரிமம் பொருட்டும் அனுமதி வழங்கப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வேறுபடும்.

(ஈ) ஆம்; மேலே (இ)(i) இன் பதில் இதற்கு ஏற்புடையது.

(உ) ஏற்புடையதன்று.

 

 

பதில் தேதி

2021-05-20

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks