01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0940/2019: Political Victimization in State Banks

940/ '19

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) எமது நாட்டின் பிரதான அரச வங்கிகளாகிய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகளின் சில பணியாளர்கள் அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருப்பதாக சிபாரிசு செய்யப்பட்டு பதவி உயர்வுகள், நிதி ரீதியான அனுகூலங்கள் மற்றும் பல்வேறு வரப்பிரசாதங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) கடந்த ஆட்சியின் போது வங்கிகளில் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்வாரா;

(iii) இன்றேல், ஏன்;

(​iv) வங்கி ஊழியர் சங்கம் உட்பட அனைத்து ஊழியர்களினதும் எதிர்ப்புக்கு மத்தியில், வங்கித்துறை வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெற்றிராத வகையில் கட்சி ஆதரவாளர்கள் சிலருக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கும் மேற்குறித்த வேலைத்திட்டங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks