01

E   |   සි   |  

 திகதி: 2019-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0829/2019: Housing in Vavuniya District

829/ '19

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில், அப்போதைய மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சிற்கு 330 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) நேரியகுளம், இலுப்பைக்குளம், வேப்பங்குளம், அழகபுரி மற்றும் அடம்பன்குளம் ஆகிய 05 கிராமங்களைச் சேர்ந்த 40 பயனாளிகள் அதன்படி, தெரிவுசெய்யப்பட்டனர் என்பதையும்;

(iii) தற்போதைய நிலவரத்தின்படி, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 330 வீடுகளுக்குப் பதிலாக செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் 150 வீடுகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால், நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள 40 பயனாளிகள் அவர்களது வீடுகளை இழந்துள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 330 வீடுகளைச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவிற்கு வழங்குவதற்குத் தடையாகவுள்ள காரணிகள் யாவை;

(ii) நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள 40 பேரினது வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

(iii) அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவுள்ள திகதி யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-04-05

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks