01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0781/2019: Assistant Manager Tea Small Holdings Development Authority from 05.08.2014 EB exams

781/ '19

கௌரவ ஜயந்த சமரவீர,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.—

(அ) (i) 2014.08.05 ஆம் திகதி முதல் சிறு தேயிலை சிறுபற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் உதவி முகாமையாளராக (மனித வள மற்றும் நிருவாகம்) பணியாற்றியுள்ள உத்தியோகத்தர், மூன்று வருட காலப்பகுதியினுள் குறிப்பிட்ட பதவிக்காகத் தோற்றவேண்டிய வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் தோற்றியுள்ளாரா;

(ii) மேற்படி பதவி வகிப்பவர் குறிப்பிட்ட பரீட்சையில் தோற்றாத அல்லது குறிப்பிட்ட பரீட்சையில் சித்தியடையாதவரெனில், உடனடியாக அப்பதவியிலிருந்து நீங்க வேண்டும் என்பதை அறிவாரா;

(iii) இதற்கேற்ப 2017.08.05 ஆம் திகதிக்குப் பின்னரும் குறிப்பிட்ட உத்தியோகத்தரை மேற்படி பதவியில் வைத்திருத்தல் தொடர்பில் அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks