01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0751/2019: Foreign Trips by PM 2016 - 2018

751/ '19

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018.07.01 தொடக்கம் 2018.12.31 ஆம் திகதி வரை பிரதம அமைச்சர் கலந்து கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவை என்பதையும்;

(ii) அந்த ஒவ்வொரு விஜயத்திலும் பங்கேற்ற நபர்களின் பெயர்கள், அவர்கள் அரச பதவி வகிக்கும் பட்சத்தில் அப்பதவிகள் மற்றும் விஜயத்தில் பங்கேற்றமைக்கான காரணம் என்பன யாவை என்பதையும்;

(iii) 2016.01.01 தொடக்கம் 2018.12.31 ஆம் திகதி வரை பிரதம அமைச்சர் பங்கேற்ற வெளிநாட்டு விஜயங்களின் பொருட்டு அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் உட்பட ஒவ்வொரு விஜயத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-09

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks