01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0650/2019: Halting carpeting the paths near Bhathiya Ground

650/ '18

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே,— நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கந்தளாய்-பாத்தியகம விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள சுமார் 1.8 கிலோ மீற்றர் நீளமான வீதிகளின் சில பகுதிகளுக்கு காப்பற் இடுவதற்கான சகல நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்து காப்பற் இடும் பணி மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில், கடுமையான மழை காரணமாக கைவிடப்பட்ட அப்பணி 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் மாறியதைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளதை அறிவாரா;

(ii) ABC கற்களும் இடப்பட்டு வீதி செப்பனிடப்பட்டுள்ளதால், இதுவரை ஏற்றுள்ள செலவுகளுக்கான பலனைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த வீதிகளின் பகுதிகளுக்கு காப்பற் இட நடவடிக்கை எடுக்கப்படுமா;

(iii) கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் அதிகாமான மக்கள் வசிக்கும் பாத்தியகம இவ்வாறு புறக்கணிக்கப்படுவது ஏன்;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-11-07

கேட்டவர்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks