01

E   |   සි   |  

 திகதி: 2019-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0415/2019: Salary anomaly of Excise Inspectors - Letter by DG Customs

415/ '19

கௌரவ நிஹால் கலப்பத்தி,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சுங்கத் திணைக்களத்தில் உற்பத்தி வரி பரிசோதகர் தரத்திலான பதவிகள் உருவாக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(ii) 2000.03.27ஆம் திகதி உற்பத்தி வரிப் பிரிவுக்கு உள்ளீர்க்கப்பட்ட கடிதம் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி (நிருவாகம்) யினால் கையொப்பமிடப் பட்டிருப்பது சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி சார்பாகவா இன்றேல், உற்பத்தி வரி பணிப்பாளர் தலைமையதிபதி சார்பாகவா;

(iii) உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழ் சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு மாத்திரம் அளிக்கப்பட்டிருந்த அதிகாரம் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லையென 2016.03.23 ஆம் திகதிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் 10 ஆம் இலக்க பணிப்புரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், இச்சட்டத்தின் கீழ் செயற்பட அதிகாரமற்ற சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு சுங்கத் திணைக்களத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பதவியொன்றுக்கான சம்பளத்தை வழுவுள்ளதாகத் தெரிவித்து கடிதம் ஒன்றை வழங்குவதற்கான அதிகாரம் இல்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா;

(iv) அதில், குறித்த பதவிக்கான சம்பள அளவுத் திட்டம் ரூபா 50,520/- 7x1320 -10x1560=75,360/- எனத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அப்போதைய நிலையில் சுற்றறிக்கை 2/97 iii இன்படி பதவிக்குரிய சம்பள அளவுத் திட்டமான ரூபா 85,440/- 5x2460=97,740/- இல் வருடாந்த சம்பளம் ரூபா 95,280/- என செலுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வாரா;

(v) இன்றேல், அதனைத் திருத்துவதற்கு எடுக்கப்படும் துரித நடவடிக்கை யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-03-06

கேட்டவர்

கௌரவ நிஹால் கலப்பத்தி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks