01

E   |   සි   |  

 திகதி: 2019-07-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0367/2019: No. of Workers in Kandalaoya Plantation and their EPF and ETF details

367/ '18

கெளரவ வேலு குமார்,— அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கண்டலோயா தோட்டத்தில் 2002 ஆம் ஆண்டில் தொழில் புரிந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) 2000 முதல் 2015 ஆம் ஆண்டு வரை இத்தோட்டத்தில் தொழில் புரிந்து ஓய்வெடுக்கச் செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது என்பதையும்;

(iii) அவ்வாறு ஓய்வெடுக்கச் செய்யப்பட்ட தொழிலாளர்களில் இன்றளவில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை செலுத்தப்படாத தொழிலாளர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) அவ்வாறான தொழிலாளர் ஒவ்வொருவரினதும் பெயர், அங்கத்தவர் இலக்கம், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி மற்றும் பணிக்கொடை ஊதியத்தின் நிலுவை தனித்தனியாக யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-07-12

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks