01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0273/2019: repairing Rathri Wewa

273/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் மொனறாகலை மாவட்டத்தின் புத்தள பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 'ராத்திரி' வாவியை மறுசீரமைப்பதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) அதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றாடல் மற்றும் பிற அங்கீகாரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) இக்கருத்திட்டத்திற்குரிய மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மறுசீரமைப்புப் பணிகள் யாவையென்பதையும்;

(iv) சம்பந்தப்பட்ட மதிப்பீட்டின் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) மேற்படி மறுசீரமைப்பின்போது வாவியின் ஆழம் மற்றும் பரப்பளவை அதிகரிக்கச் செய்வதற்காக வாவியின் அடியில் மண் அடுக்குகள் அகற்றப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(vi) மேற்படி மண் அடுக்குகள் அகற்றப்பட்ட விதம் மற்றும் அவை அப்புறப்படுத்தப்பட்ட இடம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-22

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks