01

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0104/2019: Migrant Workers who had not returned

104/ '18

கௌரவ தயாசிறி ஜயசேக்கர,— தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை வேலைவாய்ப்புகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஊழியர்களில் உரிய சேவைக் காலத்தை நிறைவு செய்த பின்னர் நாடு திரும்பாத ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) அது தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) இம்முறைப்பாடுகளின் படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) விசாரணை நடத்தப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நாடு திரும்பாமல் இருப்பதற்கு காரணங்கள் கண்டறியப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) அக்காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) நாடு திரும்பாமல் இருப்பதற்கு காரணங்கள் கண்டறியப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) நாடு திரும்பாமல் இருப்பதற்கு காரணங்கள் கண்டறியப்படாத முறைப்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks