01

E   |   සි   |  

 திகதி: 2018-10-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0999/2018: Repairing Irrigation Ampara District

999/ '18

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட சிறிய, மத்திய மற்றும் பாரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) ஒவ்வொரு புனரமைப்புப் பணிக்காகவும் மதிப்பிடப்பட்ட பணத்தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி புனரமைப்புப் பணிகளுக்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

(iv) ஆமெனில், அக் கேள்விப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட ஒப்பந்தகாரர்களின் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(v) மேற்படி ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்புடையதான புனரமைப்புப் பணிகளின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றம் தனித்தனியாக யாதென்பதையும்;

(vi) மேற்படி புனரமைப்புப் பணிகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வு, சுற்றாடல் மற்றும் பொறியியல் அறிக்கைகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(vii) மேற்படி புனரமைப்புப் பணிகளின் போது அகற்றப்பட்ட வண்டல் படிவு, மண் அல்லது மணலுக்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

(viii) ஆமெனில், அக் கேள்விப் பத்திரங்களை பெற்றுக்கொண்ட ஒப்பந்தகாரர்களின் பட்டியலொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-26

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks