01

E   |   සි   |  

 திகதி: 2018-10-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0972/2018: Repairing Rajanganaya Tank

972/ '18

கௌரவ இஷாக் ரஹுமான்,— நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இராஜாங்கனைக் குளம், வடமத்திய மாகாணத்திலுள்ள பாரிய குளங்களில் ஒன்று என்பதையும்;

(ii) தற்பொழுது மேற்படி குளத்தின் குளக்கரை மற்றும் கால்வாய் அணை போன்றன உள்ளடங்கலான நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் யாவும் ஒரு நீண்ட காலமாக பராமரிப்புச் செய்யப்படாமையின் காரணமாக அவை சேதமடைந்துள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி குளத்தை துரிதமாக புணர்நிர்மாணம் செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படும் தினம் யாதென்பதை இச்சபைக்கு அவர் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-12

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks