01

E   |   සි   |  

 திகதி: 2010-11-29   பதிலளிக்கப்பட்டவைகள் 

0624/2010: Shortage of Teachers in Al-Husseinie College - Colombo

0624/ ’10

கெளரவ ஆர். யோகராஜன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கொழும்பு 12, ஹுசைனியா வீதி, இலக்கம் 45 இல் அமைந்துள்ள ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)      மேற்படி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மொழி மூல ஆசிரிய ஆளணியை பாடவாரியாகவும்,

(ii) ஒவ்வொரு மொழி மூலத்திலும் பாடரீதியாக தற்போதுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கையையும்,

(iii) ஒவ்வொரு மொழி மூலத்திலும் பாடரீதியாக தற்போது காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை எவ்வளவு என்பதையும்,

(iv) மேற்படி ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கையையும்,

(v) அந்நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படுமென்பதையும்

அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

(இ) ரோயல், ஆனந்த மற்றும் நாளந்த ஆகிய கல்லூரிகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர் என்பதை அவர் அறிவாரா?

(ஈ) (i) மேற்படி (இ) பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளில் மேலதிகமாக காணப்படுகின்ற ஆசிரியர்களது எண்ணிக்கையை போதனா மொழி ரீதியாகவும் பாடவாரியாகவும் யாதென்பதையும்,

(ii) ஹமீட் அல் ஹுசைனியா கல்லூரியில் தற்போது நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக மேலதிக ஆசிரியர்களை இப்பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்

அவர் தெரிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-11-29

கேட்டவர்

கௌரவ கெளரவ ஆர். யோகராஜன், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks