01

E   |   සි   |  

 திகதி: 2018-10-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0544/2018: Call center operators recruited to CEB through man power agencies

544/ '18

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மின்சார சபையின் மத்திய, வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு அழைப்பு நிலையங்களில் 83 மனிதவலு ஊழியர்கள் அழைப்பு உத்தியோகத்தர்களாக 03 வருடங்களுக்கு மேலாக 24 மணிநேரமும் 03 கடமைச்சுற்றுகளின் கீழ் பொதுசன சேவையில் ஈடுபட்டுள்ளனரென்பதையும்;

(ii) மனிதவலு கம்பெனிகள் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றிய 6700 இற்கு மேற்பட்டோர் இலங்கை மின்சார சபையின் நிரந்தர மற்றும் அமயப் பதவியணியில் 2016.01.01 மற்றும் 2016.10.18 ஆகிய திகதிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்ட போதிலும், மேற்படி 83 பேர்களின் சேவை நிரந்தரமாக்கப்படாமல் இன்னமுமே மனிதவலு கம்பெனிகள் ஊடாக தொடர்ச்சியாக சேவையாற்றி வருகின்றனரென்பதையும்;

(iii) இலங்கை மின்சார சபையின் நிர்வாக மேலாண்மை இவர்களை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இவர்களின் சேவை பற்றி கருத்திற்கொண்டு அவர்களை இலங்கை மின்சார சபையின் நிரந்தர அல்லது தற்காலிக சேவையில் உள்ளீர்க்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-11

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks