01

E   |   සි   |  

 திகதி: 2018-10-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

0507/2018: Transport Authority Uva Province

1741/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் 2010 ஆம் ஆண்டில் இருந்து இற்றைவரை சேவையில் ஈடுபட்டுள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கை ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவு;

(ii) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்படி அதிகாரசபையில் இற்றைவரை வழங்கப்பட்டுள்ள தொழில்களின் எண்ணிக்கை யாது;

(iii) இவ்விதமாக தொழில் வழங்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் பதவிப் பெயர்கள் யாவை;

(iv) மேற்படி பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்த வேளையில் கடைப்பிடிக்கப்பட்ட முறையியல் யாது;

(v) ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களின் நலனோம்பலுக்காக ஊவா மாகாணசபை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-10-26

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks