logo

E   |   සි   |  

காண்க


2024, ஆகஸ்ட் 08 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஆகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2024 ஆகஸ்ட் 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(ii) கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2024.08.08 ஆம் திகதிய 44 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 20 மற்றும் 21 ஆம் இலக்க விடயங்கள்)

அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
பின்வரும் தனியார் உறுப்பினர் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டிற்காக பிரேரிக்கப்படவுள்ளது -
(iii) வர்ள்ட் லய்ப் லய்ன் யோகா நிறுவனம் (கூட்டிணைத்தல்)

(2024.08.08 ஆம் திகதிய 44 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 46 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2024 ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2024 ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2024, ஆகஸ்ட் 02 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஆகஸ்ட் 06 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 பின்வரும் தனியார் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளது-
மாகாண சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம்

(2024.08.06 ஆம் திகதிய 42 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 நில்வலா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் செயலிழப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
   

2024 ஆகஸ்ட் 07 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.00 - பி.ப. 5.30 அரையாண்டு அரசிறை நிலைப்பாட்டு அறிக்கை - 2024 தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2024 ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 இரு மருத்துவம் (திருத்தச்) சட்டமூலங்கள் — இரண்டாம் மதிப்பீடு
(2024.07.26 ஆம் திகதிய 41 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 7 மற்றும் 8 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.07.04 ஆம் திகதிய 2391/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.08.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.08.08 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 
2024 ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணை -
மறைந்த கெளரவ ரொனீ த மெல், முன்னாள் பா.உ.

2024, ஜூலை 18 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜூலை மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) நீதித்துறைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

(2024.07.12 ஆம் திகதிய 37 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 47, 59 மற்றும் 60 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
   

2024 ஜூலை 24 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக தேசிய பாதுகாப்பு, அனைத்து மதங்கள் மற்றும் நாட்டின் கலாச்சாரம் மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம்
 

2024 ஜூலை 25 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.30 (i) பகிரங்க நிதிசார் முகாமைத்துவம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

(2024.07.12 ஆம் திகதிய 37 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 48 மற்றும் 49 ஆம் இலக்க விடயங்கள்)
 
2024 ஜூலை 26 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணைகள் -
(i) மறைந்த கெளரவ ஏ.எச்.எம். அலவி, முன்னாள் பா.உ.
(ii) மறைந்த கெளரவ எம்.என். அப்துல் மஜீத், முன்னாள் பா.உ.
(iii) மறைந்த கெளரவ பாலித தெவரப்பெரும, முன்னாள் பா.உ.
(iv) மறைந்த கௌரவ மில்ரோய் பர்னாந்து, முன்னாள் பா.உ.

2024, ஜூலை 03 மற்றும் 10ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜூலை மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
பி.ப. 5.00 (ii) ஜீ.எஸ்.எம்.பீ. தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பனியின் வருடாந்த அறிக்கை (2021)
(iii) டவர் மண்டப அரங்கத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் (2021)
(iv) தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை (2022)

(2024.07.02 ஆம் திகதிய 33 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5, 13, 15 மற்றும் 19 ஆம் இலக்க விடயங்கள்)
மேற்சொன்ன (ii) – (iv) விடயங்கள் - விவாதமின்றி அங்கீகரிக்கப்படும்


அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்:
பின்வரும் சட்டமூலங்கள் பரிசீலனைக்காக பிரேரிக்கப்படவுள்ளன -
(v) மாத்தறைப் பருவம் அமைப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(vi) ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்

(2024.07.02 ஆம் திகதிய 33 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 20 மற்றும் 21 ஆம் இலக்க விடயங்கள்)

(vii) சமாதி தியான மற்றும் யோகாசன நிலையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
(2024.06.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 7 ஆம் இலக்க விடயம்)

பின்வரும் தனியார் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளன -
(viii) இலங்கை வரைதல் தொழினுட்பவியலாளர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்

(2024.07.02 ஆம் திகதிய 33 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 36 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2024 ஜூலை 10 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

(2024.06.20 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(12) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 3, 4, 5 மற்றும் 6 ஆம் இலக்க விடயங்கள்)

(iii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(2024.07.02 ஆம் திகதிய 33 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.06.29 ஆம் திகதிய 2390/28 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி காலவதியானதன் பின்னர் சனாதிபதியினால் புது அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டால், அது 2024.07.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.07.10 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2024 ஜூலை 11 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியினுள் சனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
(இந்தப் பிரேரணையானது கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ., எதிர்க்கட்சி முதற்கோலாசான் மற்றும் கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ. ஆகியோரினால் கூட்டாக முன்வைக்கப்பட்டது)
 
2024 ஜூலை 12 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00

பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன-
(i) ஆக்கிரமிப்புச் செடிகள் மற்றும் விலங்குகள் காரணமாக உயிரினப் பல்வகைமைக்கு ஏற்படுகின்ற பாதிப்பினைக் குறைத்தல்
(கெளரவ புத்திக பத்திறண)
(ii) விளையாட்டு அமைச்சின் கணக்காய்வு மற்றும் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (க
(கெளரவ ரோஹண பண்டார)
(iii) மதத் தீவிரவாதத்தினை தடுப்பதன் அவசியம்
(கெளரவ ஹேஷா விதானகே)
(iv) க.பொ.த. (உயர் தர) பரீட்சையில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் Z- புள்ளி (Z-Score) அடிப்படையில் அரசதுறை சார்ந்த சகல தொழில் வெற்றிடங்களையும் நிரப்புதல் (கௌரவ டலஸ் அழகப்பெரும)
(v) மலையகத் தொழிற்சங்க தியாகிகள் தினமொன்றைப் பிரகடனப்படுத்தல் )(கௌரவ வேலு குமார்)
(vi) இலங்கை மாணவர் சமுதாயம் தமது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதன் பொருட்டு தேசிய தொழில் வழிகாட்டல்களை முறையாக வழங்குதல் (கௌரவ ரொசான் ரணசிங்க)
(2024.06.07 ஆம் திகதிய 1(11)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் காணப்படுகின்றன)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)

2024, ஜூன் 28 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.

 

2024 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் - தொடரப்படவுள்ளது
(2024.06.27 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(13) இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாக உள்ளதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.07.02 ஆம் திகதிய ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும் )
 

2024 ஜூலை 03 புதன்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி
பி.ப. 5.00 வாக்கெடுப்பு
 

2024, ஜூன் 6 மற்றும் 18 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(ii) உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2024.06.06 ஆம் திகதிய 28 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 35, 36, 37, 39, 40, 38, 41 மற்றும் 42 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2024 ஜூன் 19 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி

(2024.06.18 ஆம் திகதிய 30 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 9 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்கள்)

(iii) சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(2024.04.22 ஆம் திகதிய 2381/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி பாராளுமன்றத்திற்கு 2024.06.18 இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், இது தொடர்பான பிரேரணை 2024.06.19 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)

(iv) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(v) குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 001 - நிகழ்ச்சித்திட்டம் 02
(vi) தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம்

(2024.06.18 ஆம் திகதிய 30 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12, 27 மற்றும் 11 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரண்டு வினாக்கள்)
 

2024 ஜூன் 21 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2024 ஜூன் 4)
(ii) யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2024.06.06 ஆம் திகதிய 28 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 12 மற்றும் 16 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2024 ஜூன் 21 வெள்ளிக்கிழமை
  பொது விடுமுறை (போயா தினம்)
இத்தினத்தில் பாராளுமன்ற அமர்வு இல்லை

2024, மே 28 மற்றும் ஜூன் 6 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2024 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2024 ஜூன் 04 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2024.05.10 அன்று வெளியிடப்பட்ட 1(8) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாக வெளியிடப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 (ii) இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
(iii) தெதிகம ஸ்ரீ மைத்திரி பிரக்ஞார்த்த பௌத்த கல்வி சபாவ (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை

(2024.05.22 ஆம் திகதிய 25 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 37 மற்றும் 38 ஆம் இலக்க விடயங்கள்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
   

2024 ஜூன் 05 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள் (04 வினாக்கள்)
மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (05 வினாக்கள்)
மு.ப. 10.30 (i) இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
இவ்மூன்று (03) விடயங்களும் விவாதமின்றி அங்கீகரிக்கப்படவுள்ளன

(2024.05.22 ஆம் திகதிய 25 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 35 மற்றும் 36 ஆம் இலக்க விடயங்கள்)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு விவாதம்
 

2024 ஜூன் 06 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 இலங்கை மின்சாரம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2024.05.22 ஆம் திகதிய 25 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 5 ஆம் இலக்க விடயம்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2024 ஜூன் 07 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) பொதுத் தனிசு முகாமைத்துவம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(iv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(v) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(vi) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(vii) துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை

(2024.06.06 ஆம் திகதிய 28 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 25 ஆம் இலக்க விடயங்கள்)

(viii) நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகளை வழங்கும் திட்டம்
(2024.05.17 ஆம் திகதிய 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி 2024.06.04 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.06.07 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 (ix) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளது
(2024.06.04 ஆம் திகதிய 2387/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி இன்று, 2024.06.06 பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2024.06.07 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (இரு வினாக்கள்)

2024, மே 14 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.

 

2024 மே 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 09.45 பத்திரங்கள், குழு அறிக்கைகள், பொது மனுக்கள் மற்றும் சட்டமூலங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்தல்
மு.ப. 09.45 - பி.ப. 5.30 எதிர்க்கட்சியினால் பிரேரிக்கப்படவுள்ள ஒத்தவைப்பு விவாதம்
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks