logo

E   |   සි   |  

காண்க

2016, மார்ச் 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஏப்ரல் 05 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபை ஒத்திவைப்பு)
பி.ப. 02.00 முதல் அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வு
 
2016 ஏப்ரல் 06 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றின் இடைநேர்விளைவான விடயங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழுவினை நியமித்தல் பற்றிய பிரேரணை
(மேற்சொன்ன விடயம் 2016.01.29 ஆம் திகதிய 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2ஆம் இலக்க (பிரேரணை இல. பா. 152/ '15) விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2016 ஏப்ரல் 07 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன விடயங்கள் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10 மற்றும் 11ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(ii) விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(மேற்சொன்ன விடயம் 2016.03.23 ஆம் திகதிய 60ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2016 ஏப்ரல் 08 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை

2016, மார்ச் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 மார்ச் 22 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம் - பொது விடுமுறை)
 
2016 மார்ச் 23 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.30 நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2016 மார்ச் 24 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 07.30 நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை பற்றி 2016.03.08 அன்று பிரதம அமைச்சரினால் விடுக்கப்பட்ட கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி
 
2016 மார்ச் 25 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பெரிய வெள்ளிக்கிழமை - பொது விடுமுறை)

2016, மார்ச் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 மார்ச் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2016 மார்ச் 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(iii) வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன விடயம் 2016.03.09 ஆம் திகதிய 57ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 22 முதல் 24 வரை மற்றும் 16,17ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)

2016, பெப்ரவரி 26ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 மார்ச் 08 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 காணாமற் போனோர் மற்றும் சிறையிலிருப்போர் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக)
 
2016 மார்ச் 09 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம்(2016 ஜனவரி 09ஆம் திகதி)
(மேற்சொன்ன விடயம் 2016.02.26 ஆம் திகதிய 55ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
 
2016 மார்ச் 10 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) முத்திரைக் கட்டணம் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை

(மேற்சொன்ன விடயங்கள் 2016.02.26 ஆம் திகதிய 55ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 முதல் 19ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(v) சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(இவ் (v) ஆம் இலக்க விடயம் 2015.11.20 மற்றும் 2016.02.01 ஆம் திகதிகளிலான முறையே 1941/42 மற்றும் 1952/10 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, இப்பிரேரணைகள் 2016.02.26 அன்று வெளியிடப்பட்ட 2(3)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2016 மார்ச் 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத் திட்ட நிவாரணப்படி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)

2016, பெப்ரவரி 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இந்த வாரத்திலான சபை அலுவல்களை பின்வருமாறு திருத்தியமைப்பதற்கு உடன்பட்டது.

2016 பெப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் (2016 ஜனவரி 09ஆம் திகதி)
(மேற்சொன்ன விடயம் 2016.02.23 ஆம் திகதிய 52ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
 
2016 பெப்ரவரி 24 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சி
 
2016 பெப்ரவரி 25 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 பெருந்தோட்டத்துறையிலுள்ள தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2016 பெப்ரவரி 26 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 2016.02.12 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

2016, பெப்ரவரி 11ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 பெப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 காணாமற் போனோர் மற்றும் சிறையிலிருப்போர் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (இதஅக)
 
2016 பெப்ரவரி 24 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 பெருந்தோட்டத்துறையிலுள்ள தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 
2016 பெப்ரவரி 25 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 07.30 அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம் (2016 ஜனவரி 09ஆம் திகதி)
(மேற்சொன்ன விடயம் 2016.02.11 ஆம் திகதிய 50ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
 
2016 பெப்ரவரி 26 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 2016.02.12 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

2016, ஜனவரி 28ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 பெப்ரவரி 09 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 உள்ளூர் அதிகாரசபைகள் தோ்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலமானது 2016.01.28 ஆம் திகதிய 46ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

கடற்றொழில், நீ்ர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2016.01.26 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2016 பெப்ரவரி 10 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்வொழுங்குவிதிகள் 2015 டிசம்பர் 22ஆம் திகதிய 1946/31 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு 2016.01.26 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இப்பிரேரணை தொடர்பாக 2016.01.29 அன்று வெளியிடப்பட்ட 2ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 பெப்ரவரி 11 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி
(இவ்வொழுங்குவிதி 2016.01.28 ஆம் திகதிய 46ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2016 பெப்ரவரி 12 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2016, ஜனவரி 19ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஜனவரி 26 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 2015.12.19 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 157 ஆம் உறுப்புரையின் கீழ் பன்னிரண்டு தீர்மானங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 
2016 ஜனவரி 27 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளை
(2015 செப்டெம்பர் 22ஆம் திகதிய 1933/15 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(ii) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள்
(2015.09.17, 2015.09.22, 2015.10.01, 2015.10.09, 2015.10.28 மற்றும் 2015.11.20 ஆம் திகதிகளிலான முறையே 1932/54, 1933/18, 1934/32,1935/45, 1938/4 மற்றும் 1941/43 இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
(iii) உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான பிரேரணை
(இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் போலந்து குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையில் வருமானம் மீதான வரிகள் தொடர்பில் இரட்டை வரி விதிப்பனவை தவிர்ப்பதற்கும் வரி செலுத்தாது தட்டிக்கழிப்பதனைத் தடுப்பதற்குமாக 2015 ஒற்றோபர் 06 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது)

(மேற்சொன்ன கட்டளைகளும் பிரேரணையும் 2016.01.12 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2016.01.12 அன்று வெளியிடப்பட்ட 1(13) இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 ஜனவரி 28 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 "அண்மைக் காலத்தில் காவல்துறையினரின் செயற்பாடு" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை (எதிர்க்கட்சி - மவிமு)
 
2016 ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 06.30 அனுதாபப் பிரேரணைகள் –
(i) மறைந்த கெளரவ ஜோர்ஜ் பெல்பொல மற்றும்
(ii) மறைந்த கெளரவ அப்துல் அஸீஸ்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks