logo

E   |   සි   |  

காண்க

2016, ஜுன் 09ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜூன் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஜூன் 21 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.06.09 ஆம் திகதிய 76ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2016 ஜூன் 22 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அரசியலமைப்பின் கீழ் பிரேரணை
(மக்கள் தீர்ப்பொன்றுக்கான மற்றும் தோ்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள்)
(மேற்சொன்ன விடயம் 2016.06.09 ஆம் திகதிய 76ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 ஜூன் 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 தகவலுக்கான உரிமை சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.06.09 ஆம் திகதிய 76ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2016 ஜூன் 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 மறைந்த கௌரவ தி.மு. குணசேகர, முன்னாள் பா.உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 01.30 - பி.ப. 06.30 மறைந்த கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, முன்னாள் பா.உ. மற்றும் முன்னாள் காணி அமைச்சர் அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)

2016, ஜூன் 08ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 ஜூன் 9ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வுகளை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2016 ஜூன் 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 05.30 நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களுக்கு எதிரான நம்பிக்கையின்மை
 
2016 ஜூன் 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

2016, மே 25ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 ஜூன் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 ஜூன் 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 கல்வி பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 
2016 ஜூன் 08 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரின் வினா நேரம்
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களுக்கு எதிரான நம்பிக்கையின்மை
(மேற்சொன்ன விடயம் 2016.04.26 ஆம் திகதிய 3ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 3ஆம் இலக்க (பா. 175/'16) விடயமாகக் காணப்படுகின்றது)
 
2016 ஜூன் 09 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 
2016 ஜூன் 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன விடயங்கள் 2016.05.25 ஆம் திகதிய 73ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 01.30 - பி.ப. 06.30 ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயங்கள் 2016.05.25 ஆம் திகதிய 73ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2016, மே 20ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2016 மே 25ஆந் திகதி, புதன்கிழமை விஷேட பாராளுமன்ற அமர்வை நடாத்தத் தீர்மானித்ததோடு, அத்தினத்தில் பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கும் இணங்கியது :

2016 மே 25 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 03.00 வெள்ளங்களினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2016, மே 17ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 மே 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2016 மே 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 அரசியலமைப்பின் கீழ் பிரேரணை
(மக்கள் தீர்ப்பொன்றுக்கான மற்றும் தோ்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள்)
(இவ்விடயம் 2016.05.17 ஆம் திகதிய 69ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2016, மே 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மே மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 மே 17 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஸ்ரீலங்கன் எயார்லைன் லிமிடெடின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 
2016 மே 18 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஸ்ரீலங்கன் எயார்லைன் லிமிடெடின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி
 
2016 மே 19 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்படிக்கை (ஏற்புறுதி) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை

(இவ்விடயம் 2016.05.06 ஆம் திகதிய 68ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 157ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(இவ்விடயம் 2016.05.06 ஆம் திகதிய 68ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 158ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஏழு தீர்மானங்கள்
(இத்தீர்மானங்கள் 2016.05.06 ஆம் திகதிய 3(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2016 மே 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 அரசியலமைப்பின் கீழ் பிரேரணை
(மக்கள் தீர்ப்பொன்றுக்கான மற்றும் தோ்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள்)
(இப்பிரேரணை 2016.02.25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2016.05.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதுதொடர்பான பிரேரணை 2016.05.06 அன்று வெளியிடப்பட்ட 3(1)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 01.30 - பி.ப. 06.30 ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(இவ்விடயங்கள் 2016.05.06 ஆம் திகதிய 68ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 160 மற்றும் 161ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2016, ஏப்ரல் 05ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2016 மே மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2016 மே 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ஆட்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.04.05 ஆம் திகதிய 62ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 
2016 மே 04 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 01.30 பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்கள்
பி.ப. 01.30 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 நுண்நிதியளிப்புச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன விடயம் 2016.04.05 ஆம் திகதிய 62ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2016 மே 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 அரசியலமைப்பு சபையின் இரண்டாவது அமர்வு
மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 குறைநிரப்பும் தொகை - தலைப்பு 240 - நிகழ்ச்சித் திட்டம் 2
(மேற்சொன்ன விடயம் 2016.04.05 ஆம் திகதிய 62ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்
 
2016 மே 06 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2016, ஏப்ரல் 05ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடி, 2016 ஏப்ரல் 7ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வை பின்வருமாறு திருத்தியமைக்க உடன்பட்டது.

2016 ஏப்ரல் 07 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 12.30 விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு எதிரான இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(மேற்சொன்ன விடயம் 2016.04.05 ஆம் திகதிய 62ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 01.30 - பி.ப. 07.30 மின்சார நெருக்கடி தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)

பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks