logo

E   |   සි   |  

காண்க


2017, டிசம்பர் 07 மற்றும் 2018, ஜனவரி 09 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2018 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2018 ஜனவரி 23 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) பாராளுமன்றத்தின் திருத்தப்பட்ட வரைவு நிலையியற் கட்டளைகள் தொடர்பான அறிக்கை - பரிசீலனை
(இவ்விடயம் 2017.12.07 ஆம் திகதிய 230ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 23ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை இறுதி வரைவு - அங்கீகரிப்பதற்கு
(இவ்ஆவணத்தின் இறுதி வரைவு 2017.11.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 

2018 ஜனவரி 24 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.00 கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி வள்ளங்களை ஒழுங்குபடுத்தல்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2017.12.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.00 - பி.ப. 06.30 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பினது 104ஆ(5)(அ) என்னும் உறுப்புரையின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்ட ஊடக வழிகாட்டு நெறிகள்
(2017.12.04 ஆம் திகதிய 2048/1ஆம் இலக்க இவ்அதிவிசேட வர்த்தமானியானது 2018.01.23 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை(இதஅக)
 

2018 ஜனவரி 25 வியாழக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2018 ஜனவரி 26 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2017, டிசம்பர் 07ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 டிசம்பர் 11ஆந் திகதியன்று பின்வரும் விடயத்தை எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :

 

2017 டிசம்பர் 11 திங்கட்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 (i) ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.12.05 ஆம் திகதிய 7(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு மற்றும் எதிரீட்டுத்தீர்வைகள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) முற்பாதுகாப்பு வழிமுறைகள் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(மேற்சொன்ன இரு சட்டமூலங்களும் 2017.12.07 ஆம் திகதிய 230ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் 20 மற்றும் 21ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
(iv) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 999)
(2017.12.05 ஆம் திகதிய 7(10)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(v) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(2017.12.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த 2017.11.30 ஆம் திகதிய 7(9)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 5 மற்றும் 6ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
 

2017, ஒக்டோபர் 31ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 நவம்பர் 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 (i) நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.10.20 ஆம் திகதிய 206ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.10.20 ஆம் திகதிய 206ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iii) குற்றச்செயல்களைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.10.20 ஆம் திகதிய 206ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(iv) உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.10.20 அன்று வெளியிடப்பட்ட 7(6)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1ஆம் இலக்க விடயமாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2017 நவம்பர் 08 புதன்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை

2017, ஒக்டோபர் 09 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 ஒக்டோபர் 17 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.10.09 ஆம் திகதிய 203ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2017 ஒக்டோபர் 18 புதன்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம் - தீபாவளி பண்டிகை)
 

2017 ஒக்டோபர் 19 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 "ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளவைகள்" தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (மவிமு)
 

2017 ஒக்டோபர் 20 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2017.09.08 ஆம் திகதிய 2035/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியானது, 2017.09.22 ஆம் திகதிய 2037/23ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியால் திருத்தப்பட்டு 2017.10.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றிய பிரேரணை 2017.10.09 அன்று வெளியிடப்பட்ட 7(5)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)

2017, செப்டெம்பர் 21ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 ஒக்டோபர் 09ஆந் திகதியன்று பின்வரும் விடயத்தை எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :

 

2017 ஒக்டோபர் 09 திங்கட்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
  * ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சமர்ப்பித்தல்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு -

(i) "மாநகர சபைகள் (திருத்தம்)"
(ii) "நகர சபைகள் (திருத்தம்)"
(iii) "பிரதேச சபைகள் (திருத்தம்)"

(மேற்சொன்ன மூன்று சட்டமூலங்களும் 2017.09.26 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன)


(iv) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(இவ்விடயம் 2017.09.21 ஆம் திகதிய 199ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2017, செப்டெம்பர் 21ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 ஒக்டோபர் 03ஆந் திகதியன்று பின்வரும் அலுவலை எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :

 

2017 ஒக்டோபர் 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 02.30 - பி.ப. 04.30  

இலங்கையின் ஜனநாயகத்தின் முதலாவது பாராளுமன்றத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறல்

2017 ஒக்டோபர் 04 புதன்கிழமை long-brace பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் 8வது மாநாடு காரணமாக பாராளுமன்ற அமர்வு இல்லை
2017 ஒக்டோபர் 05 வியாழக்கிழமை
(போயா தினம் - பொது விடுமுறை)
2017 ஒக்டோபர் 06 வெள்ளிக்கிழமை
 

2017, செப்டெம்பர் 21ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது 2017 செப்டெம்பர் 26ஆந் திகதியன்று பின்வரும் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு இணங்கியது :

 

2017 செப்டெம்பர் 26 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 06.30 (i) ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(மேற்சொன்ன கட்டளை 2017.08.01 ஆம் திகதிய 2030/19 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு 2017.09.19 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
(ii) மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(இவ்விடயம் 2017.09.21 ஆம் திகதிய 199ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 7 முதல் 10 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2017, செப்டெம்பர் 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2017 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2017 செப்டெம்பர் 19 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 மோட்டார் வாகனம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2017.09.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2017 செப்டெம்பர் 20 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 06.30 அரசியலமைப்புக்கான இருபதாவது (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.09.07 ஆம் திகதிய 195ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
 

2017 செப்டெம்பர் 21 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2017.09.07 ஆம் திகதிய 195ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 10ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2017 செப்டெம்பர் 22 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 06.30 (i) ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்வொழுங்குவிதிகள் 2017.09.06 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் இது பற்றிய பிரேரணை 2017.09.08 அன்று வெளியிடப்பட்ட 7(2)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது)
(ii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(2017.09.07 ஆம் திகதிய 195ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks