logo

E   |   සි   |  

காண்க


2020, செப்டெம்பர் 03 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2020 செப்டெம்பர் 08 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 6.30 “2019 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2020 செப்டெம்பர் 09 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 6.30 (i) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒன்பது கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2018.12.03, 2019.01.11, 2019.07.10, 2019.08.09, 2019.08.10, 2019.10.14, 2019.12.01, 2020.03.06 மற்றும் 2020.06.02 ஆம் திகதிகளிலான முறையே 2100/3, 2105/48, 2131/29, 2135/55, 2135/68, 2145/12, 2151/60, 2165/60 மற்றும் 2178/15 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபடவுள்ளன.)

(ii) மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் பத்து அறிவித்தல்கள் (52 ஆம் அத்தியாயம்)
(இவ்விடயங்கள் 2019.09.27, 2019.11.01, 2019.12.03, 2019.12.03, 2019.12.03, 2019.12.27, 2020.03.01, 2020.04.30, 2020.06.01 மற்றும் 2020.06.09 ஆம் திகதிகளிலான முறையே 2142/77, 2147/75, 2152/11, 2152/12, 2152/13, 2155/19, 2164/72, 2173/11, 2178/4 மற்றும் 2179/9 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபடவுள்ளன.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2020 செப்டெம்பர் 10 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 6.30 (i) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு அறிவித்தல்கள்
(இவ்விடயங்கள் 2019.12.05, 2020.02.25, 2020.04.16, 2020.04.22, 2020.05.19 மற்றும் 2020.05.26 ஆம் திகதிகளிலான முறையே 2152/32, 2164/15, 2171/6, 2172/10, 2176/10 மற்றும் 2177/4 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபடவுள்ளன.)

(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள் (235 ஆம் அத்தியாயம்)
(இவ்விடயங்கள் 2020.03.13, 2020.04.22 மற்றும் 2020.06.24 ஆம் திகதிகளிலான முறையே 2166/35, 2172/6 மற்றும் 2181/13 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபடவுள்ளன.)

(iii) அரசிறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(இவ்விடயங்கள் 2020.03.07, 2020.04.09, 2020.04.16, 2020.04.22, 2020.06.18 மற்றும் 2020.07.08 ஆம் திகதிகளிலான முறையே 2165/72, 2170/6, 2171/4, 2172/7, 2180/31 மற்றும் 2183/27 ஆம் இலக்க வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2020.09.08 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கபடவுள்ளன.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2020 செப்டெம்பர் 11 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 6.30 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை

2020, ஆகஸ்ட் 20 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் கலந்துரையாடலின் பின்னர், 2020 ஆகஸ்ட் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கும் இத்தினங்களில் பின்வரும் விடயங்களை எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானித்தனர்.

 

2020 ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை
2020 ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 06.30 (i) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
[2020 ஆம் ஆண்டுக்கான கணக்கு வாக்குப்பணம்] - அங்கீகரிக்கப்படவுள்ளது

(ii) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது


(மேற்சொன்ன இரு தீர்மானங்களும் 2020.08.21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன)
 

2020, பெப்ரவரி 07 மற்றும் 12 ஆந் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2020 பெப்ரவரி 18 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 (i) மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை

(2020.02.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(3) இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 4 முதல் 6 வரையான விடயங்களாகும்.)

(iii)ஆண்டறிக்கைகள் மற்றும் கணக்குகள் - விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது
(2020.02.07 அன்று வெளியிடப்பட்ட 11 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 27 முதல் 44 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 2.00 - பி.ப. 6.30 “இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை” பற்றிய ஒத்திவைப்பு விவாதம்  - (மவிமு)
 

2020 பெப்ரவரி 19 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
(மேற்சொன்ன சட்டமூலத்திற்கான சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கை 2020.02.18 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்)
பி.ப. 2.00 - பி.ப. 6.30 “இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை” பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி
 

2020 பெப்ரவரி 20 வியாழக்கிழமை

  வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபையின் அனுமதியுடன் குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஒத்திவைக்கலாம்)
மு.ப. 9.30 - பி.ப. 12.30 (i) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
(இத்தீர்மானம் 2020.02.14 அன்று வெளியிடப்படவுள்ள 1(4) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் வெளியிடப்படும்)

(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள்
(2020.02.07 ஆம் திகதிய 11 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19 முதல் 23 வரையான விடயங்களாகும்.)


(iii) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v) துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2020.02.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1(3) இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1முதல் 3 வரையான விடயங்களாகும்)
பி.ப. 12.30 - பி.ப. 7.30 “ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்  (ஐதேக)
 

2020 பெப்ரவரி 21 வெள்ளிக்கிழமை

  இன்றைய தினம் அமர்வு இல்லை
(மகா சிவராத்திரி தினம் - பொது விடுமுறை)

2020, ஜனவரி 24 திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2020 பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2020 பெப்ரவரி 04 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (Pசுதந்திர தினம் - பொது விடுமுறை)
 

2020 பெப்ரவரி 05 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 1.30 பிரதம அமைச்சரிடம் வினாக்கள் (04 வினாக்கள்)
பி.ப. 1.30 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள் (08 வினாக்கள்)
பி.ப. 2.00 - பி.ப. 6.30 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2020.01.24 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 8 விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (இதஅக)
 

2020 பெப்ரவரி 06 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 (i) விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்
(ii) கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(iii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(v) சேர் பெறுமதி வரி சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்

(இவ்விடயம் 2020.01.24 ஆம் திகதிய 8ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 14 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2020 பெப்ரவரி 07 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 அனுதாபப் பிரேரணைகள்
(i) மறைந்த கௌரவ க. நந்த மெதிவ், பா.உ.
(ii) மறைந்த கௌரவ (கலாநிதி) ரஞ்சித் அத்தபத்து, பா.உ.
(iii) மறைந்த கௌரவ பிரின்ஸ் காசிநாதர், பா.உ.
(iv) மறைந்த மா.ச. தேமிஸ், பா.உ.
 

2020, ஜனவரி 13 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2020 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

 

2020 ஜனவரி 21 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் ஒன்பது ஒழுங்குவிதிகள்
(எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் கூட்டத்தொடரின் 2019.11.11 அன்று வெளியிடப்பட்ட 103 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3 முதல் 11 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (மவிமு)
 

2020 ஜனவரி 22 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 2.00 - பி.ப. 6.30 நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்

(எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் கூட்டத்தொடரின் 2019.11.11 அன்று வெளியிடப்பட்ட 103 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 17 முதல் 19 வரையான விடயங்களாகும்.)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐதேக)
 

2020 ஜனவரி 23 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாம் கூட்டத்தொடரின் 2019.11.11 அன்று வெளியிடப்பட்ட 103 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 முதல் 15 வரையான விடயங்களாகும்)
பி.ப. 6.30 - பி.ப. 7.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஐமசுகூ)
 

2020 ஜனவரி 24 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.30 - மு.ப. 11.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 11.30 - பி.ப. 6.30 பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
 

2020, ஜனவரி 03 ஆந் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2020 ஜனவரி மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

 

2020 ஜனவரி 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 6.30 “அதிமேதகு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 

2020 ஜனவரி 08 புதன்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 6.30 “அதிமேதகு ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
 

2020 ஜனவரி 09 வியாழக்கிழமை

மு.ப. 10.30 - பி.ப. 6.30 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் பிரதம அமைச்சருமான மறைந்த கௌரவ தி.மு. ஜயரத்ன அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை
 

2020 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (போயா தினம்)

2019, நவம்பர் 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2019 நவம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்ற அமர்வினை நடாத்துவதற்கும் இத்தினத்தில் பின்வரும் விடயங்களை எடுத்துக் கொள்வதற்கும் தீர்மானித்தது.

 

2019 நவம்பர் 11 திங்கட்கிழமை

மு.ப. 11.30 - பி.ப. 2.30 (i) விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளைத் தடுத்தல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


(இவ்விடயங்கள் 2019.11.07 ஆம் திகதிய 102ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 32 மற்றும் 1 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
 

2019, ஒக்டோபர் 21 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2019 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2019 நவம்பர் 05 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2019 நவம்பர் 06 புதன்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 

2019 நவம்பர் 07 வியாழக்கிழமை

  வாய்மூல விடைக்கான வினாக்கள்
(சபையின் அனுமதியுடன் குழுவின் தீர்மானத்திற்கு அமைய ஒத்திவைக்கலாம்)
மு.ப. 10.30 - பி.ப. 12.30 (i) தேசிய புத்தாக்க முகவராண்மை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2019.10.23 ஆம் திகதிய 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(ii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(2019.10.23 ஆம் திகதிய 101 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 24 ஆம் இலக்க விடயமாகவும் 2019.10.23 ஆம் திகதிய 3(9) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 18 மற்றும் 19 ஆம் இலக்க விடயங்களாகவும் காணப்படுகின்றன)
அரச அலுவல்கள் நிறைவடைந்தவுடன்:
 
  • இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயங்கள் 2019.10.23 ஆம் திகதிய 101 ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 86 மற்றும் 72 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 1.30 - பி.ப. 6.30 ஒத்திவைப்புப் பிரேரணை (ஐமசுகூ)
 

2019 நவம்பர் 08 வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை
 





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks