logo

E   |   සි   |  

காண்க


2022, நவம்பர் 25 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2022 நவம்பர் 30 ஆம் திகதி, புதன்கிழமையன்றுக்கான பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.

 

2022 நவம்பர் 30 புதன்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 7.00 ஒதுக்கீட்டு சட்டமூலம் (2023) இற்கான குழுநிலை விவாதம்
பி.ப. 7.00

ஒதுக்கீட்டு சட்டமூலம் (2023) இற்கான குழுநிலை விவாதம் முடிவுற்றவுடன்-

(i) ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2022.11.25 ஆம் திகதிய 41ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 17 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(ii) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்
(2022.11.23 ஆம் திகதிய 1(16)ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(விவாதமின்றி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவுள்ளது)

2022, ஒக்டோபர் 27 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 நவம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2022 நவம்பர் 08 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 “நாட்டில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2022 நவம்பர் 09 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00

(i) பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் இரு அறிவித்தல்கள்
(iii) நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iv) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2022.10.21 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 13 முதல் 17 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(v) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(2022.10.21 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதுடன் 21.10.2022 அன்று வெளியிடப்பட்ட 1(11) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 4 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்களாகும்)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2022 நவம்பர் 10 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00

பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு:-
(i) சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை (திருத்தம்)
(ii) நீதித்துறை (திருத்தம்)
(iii) மாகாணங்களின் மேல் நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்)
(iv) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)
(v) கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தம்)
(vi) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தம்)
(vii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)
(viii) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தம்)
(ix) அபாயகரமான விலங்குகள் (திருத்தம்)
(2022.10.21 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 5 முதல் 8; 10 மற்றும் 11; 2 முதல் 4 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றன)

(x) சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள்
(xi) கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்

(2022.10.21 ஆம் திகதிய 26ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் முறையே 23 மற்றும் 19 முதல் 21 இலக்க விடயமாகக் காணப்படுகின்றன)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2022 நவம்பர் 11 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணைகள்-
(i) கௌரவ சந்தரகுமார விஜயா குணவர்தன, முன்னாள் பா.உ.
(ii) கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, முன்னாள் பா.உ.
(iii) கௌரவ க. துரைரெட்ணசிங்கம், முன்னாள் பா.உ.
(iv) கௌரவ (வண.) சமித்த தேரர், பததேகம தேரர், முன்னாள் பா.உ.

2022, ஒக்டோபர் 07 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஒக்டோபர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2022 ஒக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2022 ஒக்டோபர் 19 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) நொத்தாரிசு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iii) அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(iv) ஆவணங்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(v) விருப்பாவணங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(vi) மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு


(2022.10.07 ஆம் திகதிய 22ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 48, 36, 37, 39, 41 மற்றும் 42 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2022 ஒக்டோபர் 20 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (தொடரப்படவுள்ளது)
(2022.10.07 ஆம் திகதிய 22ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 33 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2022 ஒக்டோபர் 21 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின் தொடர்ச்சி
பி.ப. 5.30 இரண்டாம் மதிப்பீட்டிற்கான வாக்கெடுப்பு
பி.ப. 5.30 முதல் முழுப் பாராளுமன்ற குழு

2022, செப்டெம்பர் 29 மற்றும் ஒக்டோபர் 06 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 ஒக்டோபர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2022 ஒக்டோபர் 03 திங்கட்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 4.30 வாய்மூல விடைக்கான வினாக்கள் (50 வினாக்கள்)
 

2022 ஒக்டோபர் 04 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

(2022.09.23 அன்று வெளியிடப்பட்ட 1(7) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகும்)

(iv) “இலங்கையில் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் (Ease of Doing Business Index) பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு” நியமிக்கப்படுவதற்கான பிரேரணை
(2022.09.09 அன்று வெளியிடப்பட்ட 1(4) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் திகதியிடப்படாத பிரேரணையாக (பா. 33/2022) நிலைப்படுத்தப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2022 ஒக்டோபர் 05 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 12.30 மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை
(2022.09.23 ஆம் திகதிய 17ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 19 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 1.00 - பி.ப. 5.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கான திருத்தங்கள் [விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2022 செப்தெம்பர் 22)] - நிறைவேற்றப்படவுள்ளது
(2022.09.23 ஆம் திகதிய 17ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2022 ஒக்டோபர் 06 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
மு.ப. 10.30 - பி.ப. 5.30 கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022.10.06 அன்று முன்வைத்த கூற்று தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (தொடரப்படவுள்ளது)
 
2022 ஒக்டோபர் 07 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2022.10.06 அன்று முன்வைத்த கூற்று தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி

2022, செப்டெம்பர் 14 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2022 செப்டெம்பர் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2022 செப்டெம்பர் 20 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 தேசியப் பேரவையை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம்
(2022.09.09 அன்று வெளியிடப்பட்ட 1(4) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகும்)
 

2022 செப்டெம்பர் 21 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30 “அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டிய அவசியம்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்)
 

2022 செப்டெம்பர் 22 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 12.30 (i) இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2022.09.09 ஆம் திகதிய 13ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 33 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2022.09.09 ஆம் திகதிய 13ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 49 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 1.00 - பி.ப. 4.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துதல்
(2022.09.07 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயமாகும்)
பி.ப. 4.30 - பி.ப. 4.50 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
பி.ப. 4.50 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2022 செப்டெம்பர் 23 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 12.30 மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 1.00 - பி.ப. 5.30 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பா.உ. மறைந்த கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி

2022 செப்டெம்பர் 6ஆம் திகதி சபையின் உடன்பாட்டிற்கு அமைவாக மற்றும் 2022 செப்டெம்பர் 01ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கலந்துரையாடலுக்கு அமைவாக 2022 செப்டெம்பர் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பின்வருமாறு:-

 

2022 செப்டெம்பர் 06 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - மு.ப. 10.45 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2022.08.05 ஆம் திகதிய 2291/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2022.08.31 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2022.09.01 அன்று வெளியிடப்பட்ட 1(2) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது)

(மேற்சொன்ன விடயம் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
மு.ப. 10.45 - பி.ப. 5.30 “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2022 செப்டெம்பர் 07 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.45 - பி.ப. 5.30 “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி
 

2022 செப்டெம்பர் 08 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - மு.ப. 11.00 (i) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 130) — இரண்டாம் மதிப்பீடு
(ii) வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(iii) கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 132) — இரண்டாம் மதிப்பீடு

(2022.09.07 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
(மேற்சொன்ன மூன்று விடயங்களும் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
மு.ப. 11.00 (iv) அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் தீர்மானம் (விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளது)
(2022.10.03 அன்று வெளியிடப்பட்ட 2295/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2022.09.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான பிரேரணை 2022.09.08 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)
மு.ப. 11.00 - பி.ப. 5.30 (v) சமூகப் பாதுகாப்பு உதவுதொகை அறவீட்டுச் சட்டமூலம் -இரண்டாம் மதிப்பீடு
(2022.09.07 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

 
2022 செப்டெம்பர் 09 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 4.30 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பா.உ. மறைந்த கௌரவ அமரகீர்த்தி அதுகோரள அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணையின் தொடர்ச்சி

2022, ஆகஸ்ட் 10 மற்றும் 24 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு ஆகஸ்ட் 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் செப்டெம்பர் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2022 ஆகஸ்ட் 29 திங்கட்கிழமை

மு.ப. 09.30 சிசிர ஜயக்கொடி சியபத மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - பரிசீலனை
(ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் போது 2022.07.05 ஆம் திகதிய ஒழுங்குப் பத்திரத்தில் இச்சட்டமூலமானது பரிசீலனைக்காக நிரலிடப்பட்டிருந்தது)
மு.ப. 09.30 - பி.ப. 4.30 “மின்சாரக் கட்டண உயர்வினால் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள்” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)
 

2022 ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 2.00 ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(கௌரவ ஜனாதிபதி மற்றும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்)

(இச்சட்டமூலம் 2022.08.09 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் 2022.08.12 அன்று வெளியிடப்பட்ட 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது )
 

2022 ஆகஸ்ட் 31 புதன்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.30 ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (தொடரப்படவுள்ளது)
 

2022 செப்டெம்பர் 01 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.30 ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (தொடரப்படவுள்ளது)
 

2022 செப்டெம்பர் 02 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 4.30 ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (தொடரப்படவுள்ளது)
இச்சட்டமூலத்தின் குழு நிலை மற்றும் மூன்றாம் மதிப்பீடு

(i) வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii) வெளிநாட்டுச் செலவாணி சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iv) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்

(இவை 2022.08.12 அன்று வெளியிடப்பட்ட 1 ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் 10 முதல் 15 வரையான விடயங்களாகக் காணப்படுகிறன)

2022, ஆகஸ்ட் 03ஆம் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2022 ஆகஸ்ட் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

2022 ஆகஸ்ட் 09 செவ்வாய்க்கிழமை

பி.ப. 1.00 - பி.ப. 4.30 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) - தொடரப்படும்
 

2022 ஆகஸ்ட் 10 புதன்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.30 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி
 

2022 ஆகஸ்ட் 11 வியாழக்கிழமை

  பாராளுமன்ற அமர்வு இல்லை
(பொது விடுமுறை - பௌர்ணமி போயா தினம்)
 

2022 ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை

மு.ப. 10.00 - பி.ப. 4.30 2022 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் மேலதிகத் தொடர்ச்சி





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks