logo

E   |   සි   |  

காண்க


2023, மார்ச் 24 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 ஏப்ரல் 04 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(2023.03.24 ஆம் திகதிய 15ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகும்)

(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(2023.02.22 அன்று வெளியிடப்பட்ட 2320/46 மற்றும் 2320/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2023.03.22 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இது தொடர்பான பிரேரணை 2023.03.24 அன்று வெளியிடப்படவுள்ள 1(6) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2023 ஏப்ரல் 05 புதன்கிழமை

  பாராளுமன்ற அமர்வு இல்லை
(பொது விடுமுறை - பௌர்ணமி போயா தினம்)
 

2023 ஏப்ரல் 06 வியாழக்கிழமை

  பாராளுமன்ற அமர்வு இல்லை
(குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு)
 
2023 ஏப்ரல் 07 வெள்ளிக்கிழமை
  பாராளுமன்ற அமர்வு இல்லை
(பொது விடுமுறை - புனித வெள்ளி)

2023, மார்ச் 16 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 மார்ச் 21 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சட்டக்கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விதிகள் (276 ஆம் அத்தியாயம்) - (விவாதமின்றி) நிறைவேற்றப்படவுள்ளது
(2023.03.10 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 7 ஆம் இலக்க விடயமாகும்)

(ii) பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் பற்றிய தீர்மானம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2023 மார்ச் 09)
(2023.03.10 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(iii) பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.03.10 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 8 ஆம் இலக்க விடயமாகும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 மார்ச் 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் இரு தீர்மானங்கள்
(2023.03.13 ஆம் திகதியிடப்பட்ட 2323/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மற்றும் 2023.02.17 ஆம் திகதியிடப்பட்ட 2319/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் காலாவதியின் பின்னர் ஜனாதிபதியினால் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டால் இவை இரண்டும் 2023.03.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.03.22 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்படவுள்ளது)

(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு தீர்மானங்கள்
(2023.03.03 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 முதல் 6 வரையான விடயங்களாகும்)

(iii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (அத்தியாயம் 235)
(2023.03.10 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 4 ஆம் இலக்க விடயமாகும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2023 மார்ச் 23 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(2023.03.10 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(5) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகும்)
பி.ப. 5.00 அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்-
பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான மூன்று (03) பிரேரணைகள் - (விவாதமின்றி) அங்கீகரிக்கப்படவுள்ளன
(2023.03.03 ஆம் திகதிய வெளியிடப்பட்ட 1(4) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 9 முதல் 11 வரையான விடயங்களாகும்)

பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளன-
(i) இலங்கை பட்டயப் போக்குவரத்து நிறுவனம் (கூட்டிணைத்தல்) (திருத்தம்)
(ii) ஷைலி கல்விசார் மன்றம் (கூட்டிணைத்தல்)
(2023.03.10 ஆம் திகதிய 11ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 31 மற்றும் 44 ஆம் இலக்க விடயங்களாகும்)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2023 மார்ச் 24 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 “சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் குறித்து கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2023.03.22 அன்று முன்வைத்த கூற்று” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி

(2023.03.23 அன்று சபையினால் தீர்மானிக்கப்பட்டவாறு)

2023, மார்ச் 01 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 மார்ச் மாத முதலாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 மார்ச் 07 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 4.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
(2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 5 மற்றும் 10ஆம் இலக்க மற்றும் 2023.02.24 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3 ஆம் இலக்க விடயங்களாகும்)
பி.ப. 4.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 மார்ச் 08 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது (விவாதமின்றி)
(2023.02.27 அன்று வெளியிடப்பட்ட 2321/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2023.03.07 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.03.08 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
மு.ப. 10.30 - பி.ப. 5.00

(i) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்
(2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

(ii) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஆறு ஒழுங்குவிதிகள்
(2023.02.24 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 1 ஆம் இலக்க விடயம் மற்றும் 2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 மற்றும் 8 மற்றும் 9 ஆம் இலக்க விடயங்களாகும்)

(iii) கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 11 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பி.ப. 5.00

(i) பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான இருபத்து நான்கு (24) பிரேரணைகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன
(2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 முதல் 15 வரையான விடயங்களாகவும் மற்றும் 2023.02.24 அன்று வெளியிடப்பட்ட 1(3) ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் 4 முதல் 23 வரையான விடயங்களாகவும் காணப்படுகின்றன)

(ii) இந்திரா புற்றுநோய் நம்பிக்கைப் பொறுப்பு (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(2023.02.24 ஆம் திகதிய 7ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 43 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2023 மார்ச் 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30

‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் - (எதிர்க்கட்சி) - தொடரப்படவுள்ளது

 
2023 மார்ச் 10 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.30

‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி

2023, பெப்ரவரி 10 மற்றும் 21 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 பெப்ரவரி 21 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 (i) இலங்கைத் தேயிலைச் சபைச் சட்டத்தின் கீழ் நான்கு ஒழுங்குவிதிகள்
(ii) கம்பனிச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்

(2023.02.10 ஆம் திகதிய 3ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 முதல் 8 வரையான விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2023 பெப்ரவரி 22 புதன்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள்
(2023.02.21 ஆம் திகதிய 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 6 மற்றும் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2023 பெப்ரவரி 23 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(2023.02.17 அன்று வெளியிடப்பட்ட 2319/80 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள இவ்விடயம் 2023.02.21 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் நிலையியற் கட்டளை 27 இனை இடைநிறுத்துவதற்கான இது தொடர்பான தீர்மானம் 2023.02.22 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 5.00 அரசாங்க அலுவல்கள் நிறைவுற்றவுடன்-
பின்வரும் சட்டமூலங்களின் இரண்டாம் மதிப்பீடு பிரேரிக்கப்படவுள்ளன-
(i) இலங்கை கட்டிட சேவைகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவகம் (கூட்டிணைத்தல்)
(ii) ரதனதிஸ்ஸ சமாதான மன்றம் (கூட்டிணைத்தல்)
(2023.02.21 ஆம் திகதிய 4ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 12 மற்றும் 13 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 
2023 பெப்ரவரி 24 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணைகள்-
(i) கௌரவ ரொஹான் அபேகுணசேகர, முன்னாள் பா.உ.
(ii) கௌரவ அப்துல் பாயிஸ் கமர்தீன், முன்னாள் பா.உ.
(iii) கௌரவ அதாவுத செனெவிரத்ன, முன்னாள் பா.உ.
(iv) கௌரவ திஸ்ஸ ஆர். பலல்லே, முன்னாள் பா.உ.

2023, பெப்ரவரி 03ஆம் திகதி கூடிய அரசியற் கட்சிகளின் தலைவர்கள் 2023 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டனர்.

2023 பெப்ரவரி 08 புதன்கிழமை

மு.ப. 10.00 கௌரவ சனாதிபதி அவர்களினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்காக சபாமண்டபத்திற்கு வருகை தரல்
 

2023 பெப்ரவரி 09 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.00 (i) நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(2023.01.20 ஆம் திகதிய 58ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
(ii) பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான ஐம்பத்தொரு (51) பிரேரணைகள் - அங்கீகரிக்கப்படவுள்ளன
(2022.01.20 அன்று வெளியிடப்பட்ட 2(3) ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் 5 முதல் 55 வரையான விடயங்களாக காணப்படுகின்றன)

(ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் போது பாராளுமன்றத்தில் முறையாகக் கொண்டுவரப்பட்ட மேற்கூறிய விடய இலக்கங்கள் (i) மற்றும் (ii) ஆகியவை அரசியலமைப்பின் 70 வது பிரிவின் (4) ஆம் உறுப்புரையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி அரசாங்கத்தால் தொடரப்படும்)
மு.ப. 10.00 - பி.ப. 5.00 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33(அ) உறுப்புரைகளின் பிரகாரம் 2023 பெப்ரவரி 08 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதம் (அரசாங்கம்) – தொடரப்படும்
 

2023 பெப்ரவரி 10 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.00 கௌரவ ஜனாதிபதி முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி

2023, ஜனவரி 13 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2023 ஜனவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

 

2023 ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்

(இவை 2022 நவம்பர் 23 மற்றும் டிசம்பர் 01 ஆம் திகதிகளிலான முறையே 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2023.01.05 அன்று வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)

(ii) அந்நியச் செலவாணி சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

(இவை 2022 டிசம்பர் 02 ஆம் திகதிய 2308/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் 2023.01.05 அன்று வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 3ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 இரு தனியார் உறுப்பினர் சட்டமூலங்களான “உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்)” - இரண்டாம் மதிப்பீடு - முன்மொழிவு

(2023.01.05 அன்று வெளியிடப்பட்ட 2(1) ஆம் இலக்க பாராளுமன்ற அனுபந்தத்தில் 10 மற்றும் 11 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2023 ஜனவரி 18 புதன்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2023.01.05 ஆம் திகதிய 54ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 பல்வேறு நியதிச்சட்ட அமைப்புகளின் ஆண்டறிக்கைகள் தொடர்பாக இருபத்தி இரண்டு பிரேரணைகள் - முன்மொழிவு
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள் (02 வினாக்கள்)
 

2023 ஜனவரி 19 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 தோ்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(2023.01.05 ஆம் திகதிய 54ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 4 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 5.00 (i) அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் - அங்கீகரிக்கப்படவுள்ளது
(ii) 2019 நவம்பர் தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு (பா. 34/2022) — முன்மொழியப்படவுள்ளது
(iii) இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங் காணப்பட்ட நடவடிக்கைகளை துரிதமாக செயற்படுத்துவது தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குமான பாராளுமன்ற விசேட குழு (பா. 38/2022) - முன்மொழியப்படவுள்ளது


(2022.12.21 ஆம் திகதிய பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் 2 மற்றும் 5 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 
2023 ஜனவரி 20 வெள்ளிக்கிழமை
மு.ப. 09.30 - பி.ப. 5.30 அனுதாபப் பிரேரணைகள்-
(i) கௌரவ உபாலி தசநாயக்க, முன்னாள் பா.உ.
(ii) கௌரவ (கலாநிதி) நெவில் பர்ணாந்து, முன்னாள் பா.உ.
(iii) கௌரவ குணரத்ன வீரகோன், முன்னாள் பா.உ.
(iv) கௌரவ ராஜா கொள்ளுரே, முன்னாள் பா.உ.

2022, டிசம்பர் 12 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், 2023 ஜனவரி 05 ஆம் திகதி, வியாழக்கிழமையன்றுக்கான பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.

 

2023 ஜனவரி 05 வியாழக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2022.12.09 ஆம் திகதிய 52ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 37 மற்றும் 38 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2022, டிசம்பர் 05 மற்றும் 12 ஆம் திகதிகளில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் அலுவல்களுக்கு சபை இணங்கியது.

 

2022 டிசம்பர் 09 வெள்ளிக்கிழமை

மு.ப. 09.30 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
மு.ப. 10.30 - பி.ப. 5.00 (i) சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(ii) உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

(2022.11.25 ஆம் திகதிய 49ஆம் இலக்க பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 25 மற்றும் 26 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுகின்றன)
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2022 டிசம்பர் 13 செவ்வாய்க்கிழமை

மு.ப. 09.30 - பி.ப. 5.30 வாய்மூல விடைக்கான ஐம்பது வினாக்கள்
பி.ப. 5.30 (i) பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பில் விசாரிப்பதற்கும் அது தொடர்பில் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு - பிரேரிக்கப்படவுள்ளது

(ii) இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்குப் பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு - பிரேரிக்கப்படவுள்ளது


(2022.12.09 அன்று வெளியிடப்பட்ட 1(22) ஆம் இலக்க அனுபந்தத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க திகதி குறிக்கப்படாத பிரேரணைகள்)





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks