E   |   සි   |  

2014 ஆகஸ்ட் 19ஆந் திகதிய சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும்  திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2014 யூலை 21 ஆம் திகதிய 1872/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(ii) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 3 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 34 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டு அமைச்சரால் ஆக்கப்பட்டு 2014 மே 19 ஆம் திகதிய 1863/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள்

(iii) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை வங்கி
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான தேசிய சேமிப்பு வங்கி
(v) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை எச் டி எப் சி வங்கி
(vi) 2012/2013 ஆம் ஆண்டுக்கான மில்கோ (பிறைவேற்) லிமிட்டெட்
(vii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை
(viii) 2012 ஆம் நிதி ஆண்டுக்கான இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவகம்
(ix) 2012 ஆம் நிதி ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றம்
(x) 2011 ஆம் ஆண்டுக்கான சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகாரசபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(xi) 2013 ஆம் ஆண்டிற்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்
(xii) 2013 ஆம் ஆண்டிற்கான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு
(xiii) 2013 ஆம் ஆண்டுக்கான பெற்றோலியத் தொழிற்துறை அமைச்சு
(xiv) 2013 ஆம் ஆண்டுக்கான அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xv) இலங்கைக்கான தேசிய மனித வளங்களும் வேலைவாய்ப்புக் கொள்கையும்


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கெளரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் அவர்கள் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்:-

(i) மாநகர சபைகள் (திருத்தம்) - (252 ஆம் அத்தியாயமான) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(ii) நகர சபைகள் (திருத்தம்) - 255 ஆம் அத்தியாயமான) நகர சபைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(iii) பிரதேச சபை (திருத்தம்) - 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(iv) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) - (262 ஆம் அத்தியாயமான) உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது.

(v) உள்ளூர் அதிகாரசபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)  - 2013 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, உள்ளூர் அதிகாரசபைகள் வெற்றிடங்களை நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் திருத்துவதற்கானது.

மற்றும்

(vi) கெளரவ நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் அவர்கள் பின்வரும் சட்டமூலத்தை பிரேரித்தார்:-

நிர்மாணத் தொழில் அபிவிருத்தி

இலங்கையில் நிர்மாணத் தொழிலின் அபிவிருத்திக்கு ஏற்பாடு செய்வதற்கும்; நிர்மாணத் தொழிலின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும், பதிவுசெய்வதற்கும்; விதிமுறைப்படுத்துவதற்கும் மற்றும் தரப்படுத்துவதற்கும்; நிர்மாணம் மீதான தேசிய மதியுரைப் பேரவையைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையைத் தாபிப்பதற்கும்; நிர்மாணத் தொழில் அபிவிருத்தி நிதியம் மற்றும் நிர்மாணத் தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியத்தைத் தாபிப்தற்கும்; தொழிலுடன் தொடர்புடபட்ட உயர் தொழிலர்கள், உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கைவினைஞர்கள் என்போரினது முன்னேற்றத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் வழிமுறைகளை ஏற்பாடு செய்வதற்கும்; நிர்மாணச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பிணக்குகளைத் தீர்த்துவைப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பிரிவிடல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“எரிபொருள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல் முதலியன தொடர்பான பிரச்சினைகள்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 20ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks