பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2013
(ii) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதள மேம்பாட்டு நிறுவனம்
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான அழகியற் கலைகள் பல்கலைக்கழகம்
(iv) 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
(v) 2011 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
(vi) 2011 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
(vii) 2011 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
(viii) 2011 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக் கழகத்தின் விவசாயப் பட்டப் பின் படிப்பு நிறுவனம்
(ix) 2011 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(x) 2011 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xi) சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 2012 ஆம் ஆண்டு 101 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதப்புரை
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களுக்கு “எம்.எஸ். தெளபீக் மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) “உயர் நீதிமன்ற நீதியரசர்களை நீக்குவதற்கான தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களில், நியாயமான, சுதந்திரமான, நடுநிலையான வழக்கு விசாரணையை உறுதிசெய்வதற்காகவும்; அத்துடன் அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்காகவும் அல்லது அத்துடன் தொடர்புபட்ட துணை நிகழ்வுகளுக்குமானதொரு சட்டமூலம்”
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 72; எதிராக 34) கெளரவ விஜயதாஸ ராஜபக்ஷ அவர்களுக்கு மேற்சொன்ன சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
(iii) கெளரவ ஜானக பண்டார அவர்களுக்கு “ஸ்ரீ லங்கா அமத்யப மகா சபாவை (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (iii) என்பவை சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“கல் ஓயா தேசிய பூங்காவை பேணுதல்” எனும் ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ஆர்.எம். ரன்ஜித் மத்துமபண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜனவரி 23ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks