பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழு
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீஜயவர்தனபுர பொது வைத்தியசாலை
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான அரசாங்க மரக் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான பொதுத் திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2012 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் செலவுத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் – 2013
(vi) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 ஒற்றோபர் மாதம் 19 ஆந் திகதிய 1780/31 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(vii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 59 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 திசெம்பர் மாதம் 14 ஆந் திகதிய 1788/41 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(viii) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 29 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 யூலை மாதம் 27 ஆந் திகதிய 1768/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 செத்தெம்பர் மாதம் 07 ஆந் திகதிய 1774/36 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் (இ) பந்தியுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 ஆம் பிரிவின் கீழ் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2012 ஓகத்து மாதம் 10 ஆந் திகதிய 1770/25 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xi) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவுடனும் 19 ஆம் உட்பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்படும் அச் சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2013 யூலை மாதம் 31 ஆந் திகதிய 1821/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
பாராளுமன்றத் தெரிகுழு
பாராளுமன்றச் சேவையின் சுயாதீனப் பண்பை வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 2014 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிவரை காலத்தை மேலும் நீடிப்பதற்கான கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வரின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(i) ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
(ii) 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, 1830 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2014) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2013 நவம்பர் 23ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2014]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks