பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டிற்கான இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு(ii) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான ஜே.ஆர்.ஜயவர்தன நிலையம்
(iii) 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
(iv) 2011/2012 ஆம் ஆண்டிற்கான கஹடகஹ கிறபைட் லங்கா லிமிடெட்
(v) 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய விஞ்ஞான தொழல்நுட்ப ஆணைக்குழு
(vi) 2011 ஆம் ஆண்டிற்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (ITI)
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2012/2013 ஆம் ஆண்டிற்கான டி.எப்.சீ.சீ. வங்கியின் கணக்காய்வாளர்களின் அறிக்கையும் கணக்குகளும்
(viii) 2012 ஆம் ஆண்டிற்கான அரச நிதித் திணைக்களம்
(ix) 2012 ஆம் ஆண்டிற்கான கண்டி மாவட்டச் செயலகம்
(x) 2012 ஆம் ஆண்டிற்கான மின்வலு சக்தி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ நெரன்ஜன் விக்கிரமசிங்க அவர்களுக்கு “அரச ஊழியர் அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி, திட்டமிடல் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் கீழான நான்கு தீர்மானங்கள்
(ii) வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் கட்டளை
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2017” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1914 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 24ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks