பார்க்க

E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2012 ஆம் ஆண்டிற்கான மக்கள் வங்கி
(ii) 2011 ஆம் ஆண்டிற்கான தேயிலைச் சிறுபற்று நிலங்கள் அபிவிருத்தி அதிகார சபை
(iii) 2011 ஆம் ஆண்டிற்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம்
(iv) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
(v) 2011/2012 ஆம் ஆண்டிற்கான சிறிலங்கன் எயார்லைன்ஸ் லமிடெட்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi) 2012 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் சட்ட அலுவல்கள் திணைக்களம்
(vii) 2012 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களம்
(viii) 2012 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
(ix) 2012 ஆம் ஆண்டிற்கான வெளிவிவாகர அமைச்சு
(x) 2012 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் அமைச்சு
(xi) 2011 மற்றும் 2012 ஆம் வருடங்களுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களம்
(xii) 2012 ஆம் ஆண்டிற்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்

(xiii) 2012 ஆம் ஆண்டிற்கான குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் நிருவாக அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகம் (திருத்தம்)
1988 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க, இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவக சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற் கோலாசான் பிரேரித்தார்.


பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்கள்

சட்டமும் ஒழுங்கும் பற்றிய ஆலோசனைக்குழு எனும் ஆலோசனைக் குழுவொன்று பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக

106ஆவது நிலையியற்கட்டளையின் ஏற்பாடுகள் மூலம் தடைபெறாமல், ஆலொசனைக் குழுவானது 109ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் தனக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐந்து (05) பேருக்கு குறையாததும் இருபத்தைந்து (25) பேருக்கு மேற்படாததுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக

இவ் ஆலோசனைக் குழுவினது கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ ஹுனைஸ் பாறூக் அவர்களுக்கு பின்வரும் சட்டமூலங்களை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(i) அல்மனார் கல்லூரி (கூட்டிணைத்தல்)
(ii) மனித உரிமைகள் அமைப்பு (கூட்டிணைத்தல்)

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே பெளத்த சாசன, மத அலுவல்கள் மற்றும் சமூக சேவைகள்   அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாண சபைத் தேர்தல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டாற அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2013 ஒக்டோபர் 10ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks