பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2020 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2020 ஆம் ஆண்டுக்கான புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(iii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(v) 2020 ஆம் ஆண்டுக்கான உணவு ஆணையாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2020 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(viii) 2020 ஆம் ஆண்டுக்கான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
(x) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபையின் வருடாந்த அறிக்கை
(xi) 2019/20 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xii) 2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(xiii) 2019 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(xiv) 2019 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(xv) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கைகள்
(xvi) 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(xvii) 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xviii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 நவம்பர் 15 ஆம் திகதிய 2254/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் உறுப்புரை 154 ஆர்(4) இன் பிரகாரம் நிதி ஆணைக்குழுவின் அதிமேதகு சனாதிபதிக்கான பரிந்துரைகள்
(xx) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 நவம்பர் 30 ஆம் திகதிய 2256/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxi) (452 ஆம் அத்தியாயமான) மரங்களை வெட்டி வீழ்த்துதல் (கட்டுப்படுத்தல்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் கமத்தொழில் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 யூன் 18 ஆம் திகதிய 2232/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii) 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க , பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் 5(3) (ஆ) மற்றும் 30(3) ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, அச்சட்டத்தின் 48 ஆம் பிரிவின் கீழ் வலுசக்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஒக்டோபர் 15 ஆம் திகதிய 2249/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiii) 1979 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் 9 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய, 2(4), (6) ஆம் பிரிவின் கீழ் பெருந்தோட்ட அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 08 ஆம் திகதிய 2222/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxiv) (437 ஆம் அத்தியாயமான) இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் பெருந்தோட்ட அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 18 ஆம் திகதிய 2241/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
கௌரவ பாராளுமன்ற சபை முதவர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-
(i) தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு - தனிப்பட்ட தரவைச் செய்முறைப்படுத்துவதனை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்பாடு செய்வதற்கும்; தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல் தொடர்பாகத் தரவுடன் தொடர்புபட்டோரின் உரிமைகளை அடையாளங்காண்பதற்கும் பலப்படுத்துவதற்கும்; தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையைப் பெயர் குறிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்ககாக ஏற்பாடு செய்வதற்கானது
(ii) தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தம்) - (469 ஆம் அத்தியாயமான) தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii) விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி - சட்டத்தினால் விதிக்கப்பட்ட வரி, தீர்வை, அறவீடு, ஆயவரி அல்லது வேறேதேனும் விதிப்பனவு என்றவகையாகக் குறித்துரைக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படற்பாலனவான பணத்தொகைகளுக்குப் பதிலாக, விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியொன்றை விதிப்பதற்காக ஏற்பாடுசெய்வதற்கும்; குறித்துரைக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் சேவைகள் மீது பன்மடங்கான வரி நடப்புமுறையொன்றின் பிரயோகத்துடனும் நிருவாகத்துடனும் இணைந்த சிக்கலான தன்மைகளைத் தவிர்ப்பதன் மூலம் அத்தகைய வரிகளைச் சேகரித்தலும் நிருவகித்தலும் தொடர்பாகக் கூடுதலான வினைத்திறனை உறுதிப்படுத்துவதற்கென வரிகளைச் செலுத்துவதில் சுய இணங்கியொழுகுகையை மேம்படுத்துவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்கானது
(iv) சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்தொரு (21) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்படும் இருபத்தொரு (21) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“சனாதிபதி அவர்களினால் நிகழ்த்தப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்” தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டது.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்
அதனையடுத்து, 1800 மணியளவில் பாராளுமன்றமானது 2022 ஜனவரி 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks