பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2019 ஆம் ஆண்டுக்கான மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii) 2019 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை மற்றும் கணக்குகள்
(iii) 2018 ஆம் ஆண்டுக்கான இறப்பர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iv) 2019 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புககள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(v) 2019 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(vi) 2019 ஆம் ஆண்டுக்கான சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பியங்கர ஜயரத்ன
(ii) கௌரவ குமார வெல்கம
(iii) கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன
(iv) கௌரவ சமிந்த விஜேசிறி
(v) கௌரவ அஜித் ராஜபக்ஷ
(vi) கௌரவ (பேராசிரியர்) சரித்த ஹேரத் – இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பிரதம அமைச்சரிடம் கேட்கப்பட்ட வினாக்கள்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு வினாக்கள் கேட்கப்பட்டன:-
(i) கௌரவ புத்திக பத்திறண
(ii) கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்
(iii) கௌரவ சம்பத் அதுகோரல
(iv) கௌரவ வசந்த யாப்பாபண்டார
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 8 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம்
(ii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம்
(iii) துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஐந்து தீர்மானங்கள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) மாணவர்களது பரீட்சையின் பின்னரான காலம் வீணாகுதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ மொஹமட் முஸம்மில் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2020 ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks