பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
கௌரவ ரன்ஜன் ராமநாயக்கவின் ஒலிப்பதிவுகள் தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் மற்றும் 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் 30 ஆம் வாசகத்தின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான (2019.01.01 - 2019.03.31) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153 ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (2019.07.01 - 2019.09.30) கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை;
(iii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு (2018.01.01 - 2018.03.31) மற்றும் இரண்டாம் காலாண்டுக்கான (2018.04.01 - 2018.06.30) தேசிய பெறுகை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கைகள்; மற்றும்
(iv) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (2019.07.01 - 2019.09.30) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனியின் வருடாந்த அறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதிய 2147/72 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(v) 2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 திசெம்பர் 14 ஆம் திகதிய 2153/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி
(vi) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 4, 13 மற்றும் 17 ஆம் பிரிவுகளின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 செப்டெம்பர் 27 ஆம் திகதிய 2142/77 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 05/2019)
(vii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசம்பர் 03 ஆம் திகதிய 2152/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 07/2019)
(viii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 12, 14 மற்றும் 22 ஆம் பிரிவுகளின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசம்பர் 03 ஆம் திகதிய 2152/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 08/2019)
(ix) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 22 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசம்பர் 03 ஆம் திகதிய 2152/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 09/2019)
(x) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் நஷனல் ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் மனேஜ்மன்ட் லிமிட்டெட்டை பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2019 திசெம்பர் 30 ஆம் திகதிய 2156/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் எஸ். எல். ரி கெம்பஸ் (பிறைவெற்) லிமிட்டெட், நாகானந்த இன்டநஷனல் இன்ஸ்டிடியூட் fபோர் புடிஸ்ட் ஸ்டடிஸ் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் சினெக் கெம்பஸ் (பிறைவெட்) லிமிட்டெட் ஆகியவற்றை பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 சனவரி 06 ஆம் திகதிய 2157/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) “இலங்கை சுற்றாடலியல் தொழில் வல்லுநர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையையும் அதன் கூட்ட அறிக்கையையும் அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது மற்றும் இரண்டாவது அறிக்கைகள் அக்குழுவின் தவிசாளர் கௌரவ லசந்த அலகியவன்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii) எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iv) வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(v) சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களுக்குப் பதிலாக கௌரவ துலீப் விஜேசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vi) சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(vii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(viii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ சஜித் பிரேமதாஸ
எண்ணெய் விலையில் திருத்தம்
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ அசோக்க பிரியந்த அவர்களுக்கு “தெதிகம ஸ்ரீ மைத்திரீ பிரக்ஞார்த்த பௌத்த கல்வி தஹம் சபாவவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” இனை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 52(6) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 21 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015/2016)
(iv) தேசிய பெருந்தோட்டக் கைத்தொழில் முகாமைத்துவ நிறுவனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(v) தேயிலை சிறு பற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2015)
(vi) தேயிலை சிறு பற்றுநிலங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(vii) இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(viii) இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015)
(ix) இலங்கை துறைமுக அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(x) இலங்கை கமத்தொழில் ஆய்வுக் கொள்கைக்கான சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2016)
(xi) இலங்கை பொஸ்பேட்டு லிமிடட்டின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2016/2017)
(xii) அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2015)
(xiii) நெல் சந்தைப்படுத்தும் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2013)
(xiv) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2016)
(xv) ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2016)
(xvi) நெல் சந்தைப்படுத்தும் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் (2014)
(xvii) தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015)
(xviii) இலங்கை சிவில் விமானச்சேவைகள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2015)
(xix) இலங்கை சிவில் விமானச்சேவைகள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2016)
(xx) இலங்கை போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் (2014)
ஒத்திவைப்புப் பிரேரணை
“இலங்கை மத்திய வங்கியினால் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2020 பெப்ரவரி 19ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks