பார்க்க

E   |   සි   |  

2019 செப்டெம்பர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


புதிய உறுப்பினர்களின்  உறுதிப்பிரமாணம் அல்லது சத்தியப்பிரமாணம்

(i)    கௌரவ சாலிந்த திசாநாயக்க அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ எச்.எம்.டீ.பி. ஹேரத் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
(ii)    கௌரவ சந்திரசிறி கஜதீர அவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ மனோஜ் பிரசங்க ஹேவாகம்பலகே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
(iii)    கௌரவ குடா விதானலாகே சாந்த பண்டார அவர்களின் இராஜினமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ குடா விதானலாகே சாந்த பண்டார அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ. அவர்களின் மரணம்
‘B’ :  “இலங்கை பிளாஸ்ரிக் மற்றும் இறப்பர் நிறுவகம் (கூட்டிணைத்தல்)” எனும் தனியார் உறுப்பினர் சட்டமூலம் தொடர்பானது
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2018 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற அறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படையின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை இராணுவத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iv)    2018 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையும் கணக்குகளும்

(v)    2015/2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட றக்னா ஆரக்சக லங்காவின் வருடாந்த அறிக்கை
(vi)    2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை
(vii)    2015 ஆம் ஆண்டுக்கான வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை

(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பில் 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(ix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் நிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை

(xi)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மார்ச் 05 ஆம் திகதிய 2113/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xii)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மார்ச் 07 ஆம் திகதிய 2113/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiii)    2018 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் 51  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் மீதான சொகுசு வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 ஏப்றல் 09 ஆம் திகதிய 2118/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv)    2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க, நிதித்தொழில் சட்டத்தின் 69  ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 33 ஆம் பிரிவின் கீழ் உரிமமளிக்கப்பட்டுள்ள நிதிக்கம்பனியொன்றினை ஒடுக்குவதிலான உரிமைக் கோரிக்கைகளின் முன்னுரிமை தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2019 மே 31 ஆம் திகதிய 2125/58 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.06.21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் மூன்றாவது அறிக்கையில் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் 2017 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பில்  குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119(4) ஆம்  பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ புத்திக பத்திறண        -    இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ சுசந்த புஞ்சிநிலமே        -    நான்கு மனுக்கள்
(iii)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ    -    நான்கு மனுக்கள்           
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    ஸ்ரம வாசனா நிதியம் (திருத்தச்) சட்டமூலம்
(ii)    சம்பளச் சபைகள் (திருத்தச்) சட்டமூலம்
(iii)    தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான ஐந்து ஒழுங்குவிதிகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை உரிய சேவைகளுக்கு உள்வாங்குதல்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சி. சிறீதரன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றமானது 2019 செப்டெம்பர் 18ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks