பார்க்க

E   |   සි   |  

2019 ஜூலை 31ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2018 ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரிவின் செயலாற்றுகை அறிக்கை

(iii)    2018.02.23 முதல் 2018.10.12 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2019.04.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iv)    1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பாக நிதி அமைச்சரால்  ஆக்கப்பட்டு, 2019 ஏப்பிறல் 04 ஆம் திகதிய 2117/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர்  கௌரவ (திருமதி) பவித்ராதேவி வன்னிஆரச்சி அவர்களுக்குப் பதிலாக கௌரவ சந்தித் சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன      -     நான்கு மனுக்கள்
(ii)    கௌரவ நிஹால் கலப்பத்தி                        -     இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ சிசிர ஜயகொடி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்

1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதி அவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2019 ஜூலை 22ஆம் திகதியிலிருந்து இலங்கை எங்கணும் நடைமுறைப்படுத்திக் கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 40 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் அதற்கு எதிராக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1833 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஆகஸ்ட் 01ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks