கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 106 மற்றும் 78(ஆ) ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் ஆக்கப்பட்டு 2026 மாச்சு 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்
(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல், பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
(iv) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி சக்தி (மின்சாரப் பிரிவு) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(v) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ சஜித் பிரேமதாச
செஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்
(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்
இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடர்பான பிரச்சினைகள்
கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
எதிர்கால இணையப் போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக 2026.05.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் சார்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் பதிலளித்தார்.
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண
(ii) மறைந்த கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண
(iii) மறைந்த கௌரவ சந்திரதாச கலப்பத்தி
(iv) மறைந்த கௌரவ நந்தன குணதிலக
(v) மறைந்த கௌரவ ஜனக் மஹேந்திர அதிகாரி
(vi) மறைந்த கௌரவ ரீ. கனகசபை
ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள்
(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய
(ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ
அதனையடுத்து, 1629 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-21
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : இணைந்த விசேட பொதுக் கூட்டம் பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) என்னும் பிரிவின் கீழ், நஷனல் ஸ்கூல் ஒப் பிஸினஸ் மெனேஜ்மன்ட் (கரண்டி) லிமிட்டெட் நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) ஆம் பிரிவின் கீழ், நாகானந்த இன்டர்நஷனல் இன்ஸ்டிடியூட் போ புடிஸ்ட் ஸ்டடிஸ் (பிறைவேட்) லிமிடெட் (NIIBS) நிறுவனத்தினால் வழங்கப்படும் பட்டங்கள் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 செத்தெம்பர் 22 ஆம் திகதிய 2455/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ மற்றும் 70இ என்னும் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 27(1)(ஆ) என்னும் பிரிவின் கீழ், சினெக் கெம்பஸ் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனம் தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2025 ஒற்றோபர் 13 ஆம் திகதிய 2458/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சதுரங்க அபேசிங்ஹ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்ஹ (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. எம். தாஹிர் (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார (vi) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ ரவி கருணாநாயக்கபுதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள்கௌரவ வலுசக்தி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் இதர நபர்கள்தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்கெளரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு “அல் - ஹாஷிமி சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 12 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்(ii) ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான ஒன்பது தீர்மானங்கள் ஒத்திவைப்புப் பிரேரணை“மலையக மக்கள் தொடர்பான பிரச்சினைகள்” பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1742 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-20
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்2 : வாய்மூல விடைக்கான வினாக்கள் வழிகாட்டல்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2024 ஆம் ஆண்டுக்கான நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை.(ii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் சபரகமுவ மாகாணசபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்(iii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தொழில் அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iv) 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய கலாசார நிதியத்தின் ஆண்டறிக்கை(v) 2017 ஆம் ஆண்டுக்கான வ/ப லங்கா கட்டிடப் பொருட்கள் கழகத்தின் ஆண்டறிக்கைமனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்ப குமார (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் றாஜபக்ஷ (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ(v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)ஒத்திவைப்புப் பிரேரணை“2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ சுனில் றாஜபக்ஷ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1747 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 21ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-19
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : "பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் 2 : "நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தம்) " எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்3 : “பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதி கிடைக்கப் பெறல்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்A. இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LII (52) மற்றும் LIII (53) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVII (37) மற்றும் XXXVIII (38) ஆம் பகுதிகள்B. (i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVIII (28) ஆம் பகுதியையும்; • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXX (30) ஆம் பகுதியையும்; • 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும் மற்றும் ஆறாவது தொகுதியின் XXVI (26) ஆம் பகுதியையும்; மற்றும்• 2025 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I (1) ஆம் பகுதி(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் பத்தாவது தொகுதியினது ─ 2024 ஜூன் 30 ஆம் திகதியில் உள்ளவாறான பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்களிடமிருந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அறவிடப்பட வேண்டிய நிலுவை வரிகள், தண்டப்பணம் மற்றும் வட்டி தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i) 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டுகளுக்கான இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்க இலக்கிலிருந்து முதன்மைப் பணவீக்கத்தின் விலகல் பற்றிய அறிக்கை(ii) 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகளும் தொழிற்பாடுகளும்(iii) 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 பெப்புருவரி 24 ஆம் திகதிய 2477/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iv) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(v) திருத்தப்பட்டவாறான 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(vi) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 2 அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 03 ஆம் திகதிய 2478/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(vii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு மாநகர சபை தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றச் சபை முதல்வரின் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ix) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(x) 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை(xi) அராசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை துறைமுக அதிகாரசபை தொடர்பான விடயங்கள் பற்றி 120(4) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xii) 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் மாலைதீவு குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையிலான 2025, யூலை மாதத்தில் கையொப்பமிடப்பட்ட பொருத்தனை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 சனவரி 05 ஆம் திகதிய 2470/04 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiii) 2023 ஆம் ஆண்டுக்கான கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கை(xiv) 2023 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஆண்டறிக்கைபாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i) பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “காணி அபிவிருத்தி (திருத்தச்) சட்டமூலம்” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii) பாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “கோதாகொட குணரதன நாஹிமி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தற்காலிகத் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர (ii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தினிந்து சமன் ஹென்னாயக்க (iii) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி (iv) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்த பண்டார (v) கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசல்(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i) கௌரவ சஜித் பிரேமதாசநாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கான தீர்வுகௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii) கௌரவ ரவி கருணாநாயக்கஎதிர்கால இணையப் போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் மொத்தமாக பணம் எடுப்பதை மாதாந்த ஓய்வூதிய திட்டமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ளமை தொடர்பாக 2026.01.22 மற்றும் அரசாங்க உத்தியோகபூர்வ இருப்புக்கள் தொடர்பான மத்திய வங்கியின் புதிய சுற்றறிக்கை தொடர்பாக 2026.02.18 ஆம் திகதிகளில் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாக்களுக்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சார்பாக தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) அனில் ஜயந்த அவர்கள் பதிலளித்தார்.சட்டமூலங்கள் சமர்ப்பணம் 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக“சோ்பெறுமதி வரி (திருத்தம்)”எனும் சட்டமூலத்தினை கௌரவ தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயம்)சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“மனித - யானை மோதலுக்கான நிலைபேறான தீர்வு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 20ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
2026-05-08
கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.கௌரவ சபாநாயகரின் வரவேற்புரைகௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்களை வரவேற்று உரையாற்றினார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதியும் கொமியூனிஸ்ட் கட்சித் தலைவரருமான அதிமேதகு டோ லாம் அவர்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுப் பாராளுமன்றத்தில் ஆற்றும் உரைவியட்நாம் சோசலிசக் குடியரசின் சனாதிபதி அதிமேதகு டோ லாம் அவர்கள் சபையில் இன்று மு.ப. 11.40 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.நன்றி உரைகள்கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ சஜித் பிரேமதாச, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நன்றியுரைகளை நிகழ்த்தினர்.கௌரவ சபாநாயகர் அமர்வை பி.ப. 1.30 மணி வரை இடைநிறுத்தினார்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─• 2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLVIII (48) ஆம் பகுதியையும்; • 2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVI (56) ஆம் பகுதியையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXI (31) ஆம் பகுதியையும்; மற்றும்• 2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XLIX (49), L (50) மற்றும் LI (51) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXVI (36) ஆம் பகுதி(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புப் பேரவையின் ஆறாவது அறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக் குழுவின் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன:-• தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்ப்பினை வழங்குதல்இலங்கையில் ஏதேனுமொரு தேசிய விளையாட்டு அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அவர்களின் அடிப்படை கல்வித் தகைமைகள் அல்லது Z-புள்ளிகளின் மீது அடிப்படையாக அமையாமல் விளையாட்டுத்துறைக்குரிய எந்தவொரு பட்டப் பாடநெறியைப் பயில்வதற்குத் தேவையான சட்ட மற்றும் உயர் கல்விக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் தொடர்பில் பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரித்தல்இலங்கையின் பாரம்பரிய பல்கலைக்கழக கட்டமைப்புக்கு அப்பால், தொழிற்சந்தை மற்றும் வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பத்தை இலக்காகக் கொண்ட வாழ்க்கைத்தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள் குறித்து பாடசாலை மாணவர்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசாங்கம் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபித்தல்தாக்குதல், கடத்தல், கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகம், கொலை மற்றும் நிதி மோசடி உள்ளிட்ட புலம்பெயர்ந்த ஊழியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை ஆராய்வதற்கும், ஊழியர்கள் பாதுகாப்பாக இலங்கைக்குத் திருப்புவதற்குத் தேவையான வசதிகளை ஏற்பாடு செய்யவும் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்ட அதிகாரங்களுடன் அலகு ஒன்றைத் தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரோிக்கின்றது.• பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரித்தல்தற்போது எமது சமூகத்திலுள்ள அநேகமானோர் பேராசிரியர், கலாநிதி போன்ற பதவிகளையும், பெயர்களையும் தவறான முறையில் பயன்படுத்தி வருவதனால், அதனை தடுக்கும் பொருட்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்விசேடமாக ஊவா மாகாணம் உட்பட மலையகப் பிதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பைனஸ் செய்கையால் நீர் மூலங்களுக்கும் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவற்றை அகற்றி, பயன்தரு உள்நாட்டு பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பதற்கான முறையியலொன்று தயாரிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.• இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுத்தல்கடந்த காலத்தில் பாடசாலை ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான ஆசிரியர்களைப் பயிற்றுவித்தல், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உளவள ஆலோசனைக்கான பிரிவொன்றை நிறுவுதல், மாவட்டச் செயலகம் ஒவ்வொன்றிலும் உளவள ஆலோசனைக்கான அலகு ஒன்றை நிறுவுதல், அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் உளவள ஆலோசனைக்கான டிப்ளோமா கற்கைநெறிகள், பட்டப் படிப்பு கற்கைநெறிகள் மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளைப் போதித்தல், மன அழுத்தத்திற்குத் தீர்வுகாண ஒவ்வொரு பிரதான வைத்தியசாலையிலும் உளவியல் மருத்துவப் பிரிவுகளை ஆரம்பித்தல் போன்றவற்றால் இளம் பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதால் அரசியல் அதிகாரத்தார், அரசாங்க அலுவலர்கள், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அத்தகைய செயற்பாடுகளில் தீவிரமாக இடையீடு செய்ய வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.அதனையடுத்து, 1716 மணியளவில் பாராளுமன்றமானது 2026 மே 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.