E   |   සි   |  

2026-06-11

செய்தி வகைகள் : சபை அலுவல்கள் 

2026 ஜுன் 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i)    2023 ஆம் ஆண்டுக்கான வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் வருடாந்த அறிக்கை
(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(iii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - மூன்று மனுக்கள் 
(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான
(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர                    
(iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித்                    
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i)    கௌரவ சஜித் பிரேமதாச
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான முடிவு

(ii)    கௌரவ ரவி கருணாநாயக்க
புகையிலை தொடர்பான நோய்கள் மற்றும் இறப்புகளைக் குறைக்கவும், கள்ள வர்த்தகத்தை ஒழிக்கவும், அரசுக்கு சட்டப்பூர்வ வருவாயை அதிகரிக்கவும் அரசு கையாளும் உத்தி


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
வடமராட்சியில் உள்ள பருத்தித்துறை பகுதியில் இரண்டு மீனவர்கள் காணாமல் போனது தொடர்பான விபரங்கள் தொடர்பாக 2026.06.10 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனா அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பதிலளித்தார்.


கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு

தித்வா புயலை எதிர்கொள்வதற்காக முன்னாயத்தத்துடன் இருக்கவில்லை என்பது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரை களையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை 2026 சனவரி 21 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால், குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம் 2026 செப்தெம்பர் 19 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யபடுமாக.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i)    மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம்
(ii)    குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை



ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டின் தற்போதைய நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 



தொடர்புடைய செய்திகள்

2026-06-12

2026 ஜுன் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : கௌரவ எஸ். எம்.மரிக்கார், பா.உ. அவர்கள் எழுப்பிய சிறப்புரிமை விடயம்2 : நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்3 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மற்றும் தெரிவுக் குழு ஆகியவற்றின் கூட்டங்கள்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41எ (1) எனும் உறுப்புரையின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்புப் பேரவையின் ஏழாவது அறிக்கைபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை(ii)    (188 ஆம் அத்தியாயமான) தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் 46 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 47 ஆம் பிரிவின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 ஏப்ரல் 11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான பொதுமனுக்கள் பற்றிய குழுவின் மூன்றாவது அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.எம். காமிணி ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(iii)    சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க  -  மூன்று மனுக்கள் (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன் மாபலகம -  இரண்டு மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ கே.காதர் மஸ்தான்வவுனியா மாநகர சபையின் நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள்மேற்சொன்ன வினாவிற்கு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம்வட மாகாண ஆளுநரால் நீதி நிருவாகத்தில் முறையற்ற தலையீடுசிறப்புரிமைகள்பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர அவர்கள் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக 2026 ஜூன் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பிய விடயம், கௌரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு 118 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 75 மற்றும் 76 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்(ii)    குறைநிரப்புத் தொகை - செலவினத் தலைப்பு 240 - நிகழ்ச்சித்திட்டம் 02ஒத்திவைப்புப் பிரேரணை “2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை” பற்றிய ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்டு நிறைவுறுத்தப்பட்டது.அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-06-10

2026 ஜுன் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள்1 : விரைவு அஞ்சல் மூலம் பாராளுமன்ற வெளியீடுகளைப் பெற விரும்பும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது தொடர்பாகபத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மே 15 ஆம் திகதிய 2488/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(ii)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மே 17 ஆம் திகதிய 2488/69 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் சார்பாக அக்குழுவின் உறுப்பினர்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.(ii)    விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) ஜனக சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஹேமாலி வீரசேகர                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன கமகே  -  இரண்டு மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி                    (iv)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசோக குணசேன                    (v)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷண எகொட வித்தான(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான்பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்2026 ஹஜ் யாத்திரையில் யாத்திரிகர்கள் எதிர்கொண்ட சிரமங்கள்(ii)    கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாவடமராட்சியில் உள்ள பருத்தித்துறை பகுதியில் இரண்டு மீனவர்கள் காணாமல் போனது தொடர்பான விபரங்கள்சிறப்புரிமைக் கேள்விகள்கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (செல்வி) சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர  அனுராதபுரத்தில் நடந்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து ஊடக அறிக்கையிடப்பட்டுள்ளமைகௌரவ பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணையை சபை ஏற்றுக் கொண்டது-மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுமாகாண சபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவானது, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்களை, 2026 ஜனவரி 06 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிரேரணை மூலமாக பணிக்கப்பட்ட கால எல்லைக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுவதால் குறிப்பிட்ட விசேட குழுவிற்கு வழங்கப்பட்ட கால எல்லை, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 102 இன் பிரகாரம், 2026 செப்தெம்பர் 17 ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்படுமாக.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள்(ii)    அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம்ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை“சுகாதாரத் துறையில் தற்போதைய பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.அதனையடுத்து, 1758 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 11ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-06-09

2026 ஜுன் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சனாதிபதியின் செய்திகள்1 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) 2 : பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆணை (40 ஆம் அத்தியாயம்) சபாநாயகரின் அறிவித்தல்கள்3 : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்4 : "பணம் தூய்தாக்கல் தடை (திருத்தம்)" எனும் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம்5 : கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு6 : பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிகழ்ச்ச7 : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─•    2021 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் XLIX (49) ஆம் பகுதியையும்; •    2023 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LVII (57) ஆம் பகுதியையும்; மற்றும் •    2024 ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் LIV (54) மற்றும் LV (55) ஆம் பகுதிகளையும் மற்றும் ஒன்பதாவது தொகுதியின் XXXIX (39) மற்றும் XL (40)  ஆம் பகுதிகள்பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2026 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு(ii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 மற்றும் 5 ஆம் பிரிவுகளின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 31 ஆம் திகதிய 2482/09 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iii)    2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மே 04 ஆம் திகதிய 2487/02 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(iv)    1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 20 ஆம் பிரிவின் கீழ், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2026 மே 07 ஆம் திகதிய 2487/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட  ஒழுங்குவிதிகள் (v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை புகையிரதத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(vi)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பகிரங்க சேவை ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்(vii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அமைச்சரவை அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(viii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிதி ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(ix)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(x)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xi)    1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவிற்கமைய சனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், 2026 மே 28 ஆம் திகதிய 2490/07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் மற்றும் அதன் அட்டவணையில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம்(xii)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பொதுவான அல்லது முன்னுரிமை அடிப்படையில் பொருந்தக் கூடிய சுங்க இறக்குமதித் தீர்வையின் மீது விதிக்கப்படும் 50% மேலதிகக் கட்டணத்தின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் நீடித்தல் தொடர்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 சனவரி 31 ஆம் திகதிய 2473/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiii)    1988 ஆம் ஆண்டின் 83 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயமான) 10அ ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 12 ஆம் திகதிய 2479/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xiv)    2025 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் 2026.04.02 முதல் 2026.04.29 வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் அபிவிருத்திச் செயற்பாடுகள் நிகழ்ச்சித்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு(xv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாராளுமன்றத்தின் அரசாங்கக்கட்சி முதற்கோலாசான் அலுவலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xvi)    தேசிய கனிமக் கொள்கை – 2026(xvii)    2025 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை(xviii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அநுராதபுர மாவட்ட செயலகம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(xix)    2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தின் 1(2) ஆம் பிரிவின் கீழ் அப்போதைய வலுசக்தி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2026 மாச்சு 05 ஆம் திகதிய 2478/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை(xx)    2022 ஆம் ஆண்டுக்கான முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்திற்கான ஆண்டறிக்கைகுழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக் குழுவின் தவிசாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ                    (ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார   - நான்கு மனுக்கள் (iii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க - இரண்டு மனுக்கள்                    (மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசதேசியப் பொருளாதார, நிதி மற்றும் பணவியல் கொள்கைகளின் விபரங்கள்கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.(ii)    கௌரவ ரவி கருணாநாயக்கசமூக, பொருளாதார மற்றும் நிதிப் பலன்கள் தொடர்பான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் மதிப்பீடு அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்(i)    “தித்வா” புயல் நட்டஈடு தொடர்பாக 2026.01.07 அன்று கௌரவ ஹெக்டர் அப்புஹாமி அவர்களினால் பிரதம அமைச்சரிடம் வினவப்பட்ட வினாவிற்கு பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் பதிலளித்தார்.(ii)    சுற்றுலா வருகைக்கும் தனிநபர் சுற்றுலா வருவாய்க்கும் இடையிலான துண்டிப்பு தொடர்பாக 2026.01.20 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவிற்கு வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் பதிலளித்தார்.இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 6 ஆம் இலக்க) பின்வரும் விடயங்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன:-(i)    முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை  (ii)    துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை  (iii)    உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (iv)    பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை(v)    பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழான தீர்மானம்(vi)    பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் – வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது (ஆதரவாக 135; எதிராக 07)அதனையடுத்து, 1756 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 10ஆம் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 


2026-05-22

2026 மே 22ஆந் திகதியின் சபை அலுவல்கள்

கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.பத்திரங்கள் சமர்ப்பித்தல்(i)    2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 106 மற்றும் 78(ஆ) ஆகிய பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் ஆளும் சபையின் தலைவரும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரினால் ஆக்கப்பட்டு 2026 மாச்சு 12 ஆம் திகதிய 2479/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விதிகள்(ii)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பதிவாளர் நாயகத் திணைக்களம் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(iii)    அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை,  ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருணாகல்,  பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டச் செயலகங்கள் தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்(iv)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வலுசக்தி சக்தி (மின்சாரப் பிரிவு) தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் 119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை(v)    அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விடயங்கள் பற்றி பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்  119(4) இன் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை மனுக்களைச் சமர்ப்பித்தல்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுண ஆரச்சி(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்(i)    கௌரவ சஜித் பிரேமதாசசெஸ் வரி மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள்(ii)    கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தொடர்பான பிரச்சினைகள்கௌரவ நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்எதிர்கால இணையப் போர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இணையக் குற்றங்களிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக 2026.05.19 ஆம் திகதி பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்களின் கீழ் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் எழுப்பிய வினாவுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் சார்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ எரங்க வீரரத்ன அவர்கள் பதிலளித்தார்.அனுதாபப் பிரேரணைகள்பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:- (i)    மறைந்த கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண(ii)    மறைந்த கௌரவ எஸ்.சீ. முதுகுமாரண(iii)    மறைந்த கௌரவ சந்திரதாச கலப்பத்தி(iv)    மறைந்த கௌரவ நந்தன குணதிலக(v)    மறைந்த கௌரவ ஜனக் மஹேந்திர அதிகாரி(vi)    மறைந்த கௌரவ ரீ. கனகசபைஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்(i)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கஞ்சன வெலிப்பிட்டிய(ii)    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ  அதனையடுத்து, 1629 மணியளவில் பாராளுமன்றமானது 2026 ஜுன் 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks