02

E   |   සි   |  

2008-07-08

செய்தி வகைகள் : செய்திகள் 

கெளரவ கீதாஞ்சன குணவர்தன அவர்கள் பிரதிச் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்கின்றார்

கெளரவ கீதாஞ்சன குணவர்தன அவர்கள் 2008 ஜூலை மாதம் 01 ஆம் திகதி பிரதிச் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்தார். இவர் 2004 ஏப்பிரல் 22 ஆந் திகதியிலிருந்து இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகராக கடமையாற்றினார்.

பிரதிச் சபாநாயகர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர் இன்றைய தினம் சபையில் ஆற்றிய உரை பின்வருமாறு.


கெளரவ சபாநாயகர் அவர்களே,

புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ பியங்கர ஜயரத்ன அவர்கள், பிரதிச் சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டமையையிட்டு எனது நல்வாழ்த்துக்களை சகோதர உறுப்பினர்களுடன் சேர்ந்து தெரிவித்துக்கொள்கின்றேன். 1989 இல் அவரது அன்புத் தந்தையான முன்னாள் அமைச்சர் கெளரவ எஸ்.டீ.ஆர். ஜயரத்ன அவர்களுடன் பாராளுமன்றத்தில் மிகவும் நெருக்கமாகச் செயலாற்றிய ஒரு உறுப்பினர் என்றவகையில், அத்தகைய உன்னதமான தந்தையhரின் புதல்வர் மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டமையையிட்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன் என்பதை மனப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதேபோன்று கெளரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, உங்களது கடமையின் போது எம் அனைவருடைய ஒத்துழைப்புடன் இப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு எதிர்காலத்தில் உங்களுக்கு சக்தியும் துணிவும் கிடைக்கட்டுமாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

1948 இல் இருந்து 60 வருட காலமாக முன்னேற்றம் கண்டுள்ள பாராளுமன்றச் சனநாயகத்தையும், இது தொடர்பில் மக்கள் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப உங்களால் முடியுமென நாம் நம்புகிறோம்.

கெளரவ சபாநாயகர் அவர்களே,

உங்களுடன் கலந்துரையாடியவாறு, இவற்றுக்கு மேலதிகமாக இவ்வெற்றிடம் உருவாகியமைக்கான காரணம் தொடர்பில் ஒருசில விடயங்களையிட்டு உரையாட எதிர்பார்க்கின்றேன்.

2004 ஏப்ரில் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சேர்ந்து நிறுவப்பட்ட அரசாங்கத்தின் ஆளுங்கட்சியின் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டேன். இதற்கு முன்னர் 1989 இல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு. தினேஷ் குணவர்தன அவர்களுடன் பாராளுமன்றத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மூவரில் ஒருவராக 05 வருட காலம் பாராளுமன்றத்தில் சேவையாற்றுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

1994 இல் இருந்து 2004 வரையிலான காலத்தினுள் முழுநேரஅரசியலில் ஈடுபட்டு, மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதோடு, கொழும்பு மாநகர சபையின் மாநகர சபை உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ளேன். அதேநேரம் போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளராகச் சேவையாற்றும் பொருட்டு 2000 ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நான் இராஜினாமாச் செய்தேன்.

2004 இல் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை முதலில் நான் நிராகரித்த போதிலும், முன்னாள் சபாநாயகர் கெளரவ அனுர பண்டாரநாயக்க அவர்களினதும், அப்போதைய பிரதம அமைச்சர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் வேண்டுகோளின்பேரில் இப்பதவிக்காக முன்வருவதற்கு இணங்கினேன். இதற்கிணங்க அனைவரினதும் ஒத்துழைப்புடன் பிரதிச் சபாநாயகர் பதவிக்குப் போட்டியின்றித் தெரிவு செய்யப்படுவதற்கு முடியுமாயிற்று.

கெளரவ சபாநாயகர் அவர்களே,

உங்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் இந்த வெற்றிடம் தோன்ற ஏதுவாக அமைந்த காரணங்கள் பற்றி இதற்கு மேலதிகமாக ஒருசில வார்த்தைகள் குறிப்பிட விரும்புகிறேன்.

2004 ஏப்பிரல் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் ஆளுங்கட்சியின் மக்கள் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராக இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்றத்தில் இணைந்தேன். இதற்கு முன்னர் 1989ல் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவH;;; தினேஷ் குணவர்தன அவர்களுடன் மக்கள் ஐக்கிய முன்னணி உறுப்பினHகள் மூவரில் ஒருவராக 05 வருடங்கள் பாராளுமன்றத்தில் செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது.

1994 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் முழுநேர அரசியலில் ஈடுபட்டு, மக்கள் ஐக்கிய முன்னணி என்ற வகையிலும், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு கொழும்பு மாநகர சபையின் நகரசபை உறுப்பினராகவும் செயலாற்றினேன். அவ்வேளையில் போக்குவரத்து அமைச்சரின் அந்தரங்கச் செயலாளராகப் பணியாற்றும்பொருட்டு 2000ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினா் பதவியை இராஜினாமா செய்தேன்.

2004ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் பிரதிச் சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை முதலில் நான் நிராகரித்தபோதிலும், முன்னாள் சபாநாயகர் கெளரவ அநுர பண்டாரநாயக்க அவாகளினதும் அப்போதைய பிரதமர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் வேண்டுகோளின் பேரில் அப்பதவிக்காக முன்வர இணங்கினேன். அதற்கிணங்க பிரதிச் சபாநாயகா் பதவிக்குப் போட்டியின்றி நியமிக்கப்பட அனைவரினதும் ஒத்துழைப்புடன் இயலுமாயிற்று.


கடந்த நான்கு வருட காலத்தில் இப்பதவியின் பணிகளை தங்களின் கீழ் பாராளுமன்றத்தில் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலையில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றியமையைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இங்கு ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் முன்வைக்கப்பட்ட சவால்களையும் கௌரவத்துடன் நினைவுகூருகின்றேன்.

ஜனநாயகத்தின் பொற்கோயில் என நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பாராளுமன்றம் தொடர்பாக மக்களின் நம்பிக்கையையும் கௌரவத்தையும் வென்றெடுப்பது எம் அனைவரினதும் கடமை எனக் கருத வேண்டும் என எண்ணுகின்றேன்.

முன்னாள் ஆளும் கட்சி பிரதம முதற்கோலாசானின் உயிர் கொடூர பயங்கரவாதத்தினால் பலியெடுக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் நகர அபிவிருத்தி புனித பகுதிகள் அபிவிருத்தி அமைச்சருமான கௌரவ தினேஸ்ஷ் குணவர்த்தன அவர்கள் ஆளும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். கௌரவ தினேஸ்ஷ் குணவர்த்தன அவர்கள் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவராக இருப்பது மட்டுமன்றி எனது மூத்த சகோதரராகவும் இருக்கின்றார் என்பது யாரும் அறிந்த விடயமாகும்.

பாராளுமன்றத்தில் தலைமை ஆசனத்தின் பணிகளின் போது முதற்கோலாசானுடன் பல பிரச்சினைகள் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டதைப்போன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது என்பதைத் தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.

இந்நிலைமையில் நீதி வழங்கும்போது அந்தத் தீர்ப்பு நியாயமானதும் சட்டபூர்வமானதுமாக இருக்கவேண்டும் என்பதுடன் அது செயலினால் எடுத்துக்காட்டப்படவேண்டும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த கோட்பாடாகும்.

பாராளுமன்றத்தில் அக்கிராசனத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற மரபுகளையும் பாதுகாக்கும் முக்கியத்துவத்தைக்கொண்டுள்ள அரசியலமைப்பின் மூலம் நியமனம் பெற்ற பிரதி சபாநாயகர் பதவியை அதன்மீதிருந்த பண்புரீதியான கடப்பாடு காரணமாக இராஜிநாமா செய்தேன் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

இச் சந்தர்ப்பத்தில் இப்பதவியில் கடமையாற்றுகின்றபோது தாங்களும் பிரதம அமைச்சர் அவர்களும் அதிமேதகு சனாதிபதி அவர்களும் எனக்கு எவ்வித நிர்ப்பந்தங்களுமின்றி கடமையாற்றுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் எனது இராஜிநாமா தொடர்பான விடயங்களை விளக்கியபோது அதை அதிமேதகு சனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டதை நான் பெரிதும் மதிக்கின்றேன். இதன்மூலம் அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் அவர்களுக்கு அப்பதவியில் சிரமமின்றி பணியாற்ற வாய்ப்புக் கிட்டும் என நினைக்கின்றேன்.

இறுதியாக உங்களுக்கும் பிரதம அமைச்சர் அவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் செயலாளர் நாயகம் முதல் தோட்ட வேலை செய்யும் தொழிலாளி வரைக்குமான அனைத்து பாராளுமன்ற பணியாளர்களுக்கும் அவர்கள் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தெரிவிக்கின்ற அதே நேரத்தில் அதைப் பெரிதும் மதிக்கின்றேன். அத்துடன் அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புதிய பிரதி சபாநாயகர் கௌரவ பியங்கர ஜயரத்ன அவர்களுக்கு இப்பதவியில் பணியாற்றுவதற்கான சக்தியும் தைரியமும் அனைவருடைய ஒத்துழைப்பும் கிட்டுமாக என இதயபூர்வமாகப் பிரார்த்திக்கின்றேன்.

மும்மணிகளின் ஆசிர்வாதம் கிட்டுக!



தொடர்புடைய செய்திகள்

2026-10-06

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு தனது கையொப்பத்தையிட்டு கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (ஒக். 06) சான்றுரைப்படுத்தினார்.இந்தச் சட்டமூலம் கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் கடந்த 2026 ஆகஸ்ட் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்மூலம், 1992 ஆம் ஆண்டின்  46ஆம் இலக்கச் சட்டத்தின் சட்ட மற்றும் நிர்வாக விதிகள் புதுப்பிக்கப்பட்டு, ஏற்றுமதி கமத்தொழில் பயிர்கள் தொடர்பான சட்டக் கட்டமைப்பும் திருத்தப்படுகிறது.இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்பைப் புதுப்பித்து, 'பணிப்பாளர்’  என்ற பதவிக்குப் பதிலாக 'பணிப்பாளர் நாயகம்’ என்ற பதவியை அறிமுகப்படுத்தவும், இதற்கு மேலதிகமாக பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் ஆகிய பதவிகளை அறிமுகப்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.அத்துடன், “ஏற்றுமதி விவசாயப் பயிர்” என்பதற்கான வரைவிலக்கணமும் திருத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு மேலதிகமாக ஏற்றுமதிச் சாத்தியக்கூறுகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட பயிர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நெல், மரக்கறிகள், பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் குறிப்பிட்ட சில உணவுப் பயிர்கள் உள்ளிட்ட தெளிவாகக் குறிப்பிடப்பட்ட பயிர் வகைகளும், பெருந்தோட்டப் பயிர்களும் இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.இதற்கமைய, ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தம்) சட்டமூலமானது, 2026ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்த) சட்டமாக அமுலுக்கு வருகிறது.


2026-10-02

ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கடந்த செப். 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ்  2493/36  மற்றும் 2493/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள், 2493/38 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி  முதல் மு.ப 11.00 மணிவரை வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பி.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹர்ஷ த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்1983 ‘கறுப்பு  ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும்,மேலும் இதுபோன்ற இனவன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


2026-10-01

பரீட்சைகளில் சித்தியடைவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், நடைமுறை வாழ்க்கைத் திறன்களுடன் கூடிய பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பரீட்சைகளில் சித்தியடைவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் (செப். 29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய கல்வி முறைமையின் மூலம் பரீட்சைகளில் சித்தியடையக்கூடிய பிள்ளைகளை உருவாக்க முடிந்துள்ள போதிலும், அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்கள், அத்துடன் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.பாடசாலைகளுக்கு இடையில் காணப்படும் வளங்களின் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.அத்துடன், பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கக்கூடிய இடமாக மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை விருத்திக்காக பாடசாலை விளையாட்டு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், இளைஞர் தலைமுறையினர்  ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். அரசியல் என்பது கட்சி அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும், சமூகத்தில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளாகத் தலையீடு செய்வதும் அதன் முக்கியமானதொரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கை பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர், பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசியல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்கு இளைஞர் தலைமுறையினர் செயற்பாட்டுடன் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எந்தவொரு தொழிலையும் கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், ஏனையவர்களின் தொழில்களை மதித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.  சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மனப்பாங்கில் மாற்றம் அவசியம் எனவும், ஒழுக்கமும் நாகரிகமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.கொழும்பு வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஜனாதிபதி செயலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்த நிகழ்வில்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, மேல் மாகாண பிரதம செயலாளர் கே.ஜி. பிரதீப் புஷ்பகுமார, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, வலயக் கல்விப் பணிப்பாளர் உதென ஹெட்டிஆராச்சி, பிரதி கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரஞ்சித் பிரேமதிலக்க, பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹசினி விஜய விக்ரம, பிரதி கல்விப் பணிப்பாளர் (பாடசாலை நிர்வாகம்) சாமலி எதிரிசிங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) ஏ.கே.எஸ்.கே. ரூபதேவ, கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான கலாநிதி கே.டபிள்யூ. கிரிஷான் சிந்தக மற்றும் நதீஷா நிர்மலீ உள்ளிட்டோரும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-30

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

வரவுசெலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடு ஒக்டோபர் 07ஆம் திகதிவரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் அண்மையில் (செப். 25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில்  ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.மேலும், இரண்டாம்  மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு  இணக்கம் காணப்பட்டது.அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks