02

E   |   සි   |  

2017-10-03

செய்தி வகைகள் : செய்திகள் 

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறல்

இலங்கை பாராளுமன்ற ஜனநாயகத்தின் 70வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் முகமாக விசேட பாராளுமன்ற அமர்வொன்று இன்று (ஒக்டோபர் 03) பி.ப. 02.30 மணிக்கு நடத்தப்பட்டது. பிரதான அலுவல்களின் ஆரம்பத்தில் கௌரவ பிரதம அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்களினால் பின்வரும் பிரேரணை முன்வைக்கப்பட்டது;

 

“இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வில், ஒரு சுயாதீனப் பாராளுமன்றமாக அதன் முதலாவது கூட்டம் இடம்பெற்று 70 ஆவது ஆண்டு நிறைவைப் பெருமையுடன் அனுஷ்டிப்பதுடன், சனநாயக ஆட்சியில் முறியடிக்கப்படாத்தொரு சாதனையுடன் ஆசியப் பிராந்தியத்தில் உலகளாவிய வாக்குரிமையினால் தெரிவு செய்யப்பட்ட பழமையான பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் விளங்குகின்றது எனக் குறிப்பிடுகின்ற அதேவேளை, இப்பாராளுமன்றத்திற்கும் இலங்கை மக்களுக்கும் சனநாயக பாரம்பரியங்கள், கோட்பாடுகள் மற்றும் சட்டவாட்சியை மேலும் வலுப்படுத்தி சுபீட்சமும் அபிவிருத்தியும் பெற்று திகழுமாகவென இப்பாராளுமன்றம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.”

 

அதிமேதகு சனாதிபதியின் உரையை அடுத்து முறையே கௌரவ பிரதம அமைச்சர், கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ சபை முதல்வர், கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான், கௌரவ எதிர்கட்சி முதற்கோலாசான் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியற் கட்சித் தலைவர்களினால் உரைகள் ஆற்றப்பட்டன. அதன் பின்னர் கௌரவ சபாநாயகர் அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

 

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பிற்கான சங்கத்திற்கு (SAARC) உரித்தான நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் எட்டாவது மாநாட்டிற்கு இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள அந்நாடுகளின் பாராளுமன்றங்களின் கௌரவ சபாநாயகர்களும் சபாநாயகரின் கலரியிலிருந்து இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.

 

“பிரதிநிதிகள் சபை” என அழைக்கப்படும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான முதலாவது பாராளுமன்றம் கொழும்பிலுள்ள ராஜ்ய சபை கட்டிடத்தில் (பழைய பாராளுமன்ற கட்டிடம்) 1947 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் தடவையாக கூடியது. இது 101 உறுப்பினர்களை உள்ளடக்குவதுடன், இதில் 95 பேர் உலகளாவிய வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டதுடன் 6 பேர் ஆளுநர்-நாயகத்தினால் பரிந்துரைக்கப்பட்டனர்.

 

பொதுத் தேர்தலானது 1947 ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 20 வரையான 19 நாட்களுக்கு நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சி 42 ஆசனங்களையும், அதன் மூலம் பெரும்பான்மையை பெற்றுக் கொண்டதுடன் நாட்டின் முதலாவது பிரதம அமைச்சராக அதிகௌரவ டி. எஸ். சேனநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். லங்கா சமசமாஜ கட்சி, போல்செவிக் லெனின்ஸ்ட் கட்சி, கமியுனிஸ்ட் கட்சி, தொழிலாளர் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை இந்திய காங்கிரஸ் பொதுத் தேர்தலின் போது ஆசனங்களை வென்ற ஏனைய அரசியற் கட்சிகளாகும். சுயாதீன அபேட்சகர்கள் இருபது பேரும் தெரிவு செய்யப்பட்டனர். பலங்கொட முதலாவது உறுப்பினர், கௌரவ (சேர்) அலெக்ஸாண்டர் பிரன்சிஸ் மொலமுரே, அவர்கள் சபாநாயகராகவும் தெரிவு செய்யப்பட்டார். ஆர். சென்ட் எல். பீ. தெரணியகல அவர்கள் (சி.பி.ஈ.) பிரதிநிதிகள் சபையின் செயலாளராவார்.

 

செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை எனும் சபைகள் இரண்டைக் கொண்ட இலங்கையின் (அன்றை சிலோன்) முதல் பாராளுமன்றம் இரட்டை வாரியமாக இருந்தது. அது நிறுவப்பட்டது சோல்பரி ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் படி மற்றும் சிலோன் (அரசியலமைப்பு) சபை கட்டளையின் அடிப்படையிலுமாகும். 1931 இல் உருவாக்கப்பட்ட சிலோன் ராஜ்ய சபையின் மூலம் பிரதியீடு செய்யப்பட்டது. செனட் சபை 1971 இல் இல்லாதொழிக்கப்பட்டதுடன், 1972 இல் குடியரசு அரசியலமைப்பு செயற்படத் தொடங்கியதுடன் பிரதிநிதிகள் சபைக்கு பதிலாக தேசிய அரசுப் பேரவை அமைக்கப்பட்டது. 1978 செப்டம்பர் 7ஆம் திகதி இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதுடன் இரண்டாவது தேசிய அரசுப் பேரவைக்கு பதிலாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது பாராளுமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

தற்போதைய பாராளுமன்றம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றமாவதுடன், ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் பதினேழாவதாகும். 1947 முதல் உறுப்பினர்கள் 14 பேர் பிரதம அமைச்சர் பதவியை வகித்துள்ளதுடன், 18 பேர் பாராளுமன்ற சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்று வரை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பதவியில் (இதற்கு முதல் சபை செயலாளர் என அழைக்கப்பட்ட) ஏழு பேர் சேவையாற்றியுள்ளனர்.

 

தினத்தின் சபை அமர்வை பார்க்க

 

 

1947 ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதலாவது கூட்டம்

1 2

 

 

 

3 4

5 6        7

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-02

ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றம் ஒக்டோபர் 06ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கூடவுள்ளது.இந்தப் பாராளுமன்ற அமர்வுவாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தலைமையில் கடந்த செப். 25ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.இதற்கு அமைய ஒக்டோபர் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ்  2493/36  மற்றும் 2493/37 ஆம் இலக்க வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்கு விதிகள், 2493/38 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் பொதுத்தனிசு முகாமைத்துவச் சட்டம் ஆகியவை குறித்த விவாதங்கள் இடம்பெறவுள்ளன.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத் தரப்பினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 07ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் வினாக்களுக்கும், மு.ப. 10.30 மணி  முதல் மு.ப 11.00 மணிவரை வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் பி.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒக்டோபர் 08ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்றையதினம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை கீழ்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்கள்தனியார் உறுப்பினர் பிரேரணைகௌரவ ஹர்ஷ த சில்வாதியகம வனத்தைப் பாதுகாத்தல்கௌரவ சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்துபுத்தளம் புகையிரதப் பாதையில் புகையிரத சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்தல்கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன்1983 ‘கறுப்பு  ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிவதற்கும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கும்,மேலும் இதுபோன்ற இனவன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்குமான விதப்புரைகளைச் செய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தல்கௌரவ லசித் பாஷண கமகேவீதி ஒதுக்குப் பிரதேசங்களில் மரங்களை நடுதல், அறிவியல் ரீதியாக முகாமை செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றுக்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சிஇலங்கையின் சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழக பீடங்களாக மாற்றுதல்கௌரவ சமிந்த விஜேசிறிஇலங்கை வெளிநாட்டு சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்கௌரவ ரவி கருணாநாயக்கஇலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 


2026-10-01

பரீட்சைகளில் சித்தியடைவதுடன் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், நடைமுறை வாழ்க்கைத் திறன்களுடன் கூடிய பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் நோக்கம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பரீட்சைகளில் சித்தியடைவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்களைக் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு அண்மையில் (செப். 29) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், தற்போதைய கல்வி முறைமையின் மூலம் பரீட்சைகளில் சித்தியடையக்கூடிய பிள்ளைகளை உருவாக்க முடிந்துள்ள போதிலும், அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான திறன்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் பாடசாலையில் பெற்றுக்கொள்ளும் அறிவை நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் திறன், சமூக மற்றும் உணர்வுசார் திறன்கள், அத்துடன் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான புரிதல் ஆகியவற்றை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.பாடசாலைகளுக்கு இடையில் காணப்படும் வளங்களின் ஏற்றத்தாழ்வைக் குறைத்து, அனைத்து பாடசாலைகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.அத்துடன், பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, கவர்ச்சிகரமான மற்றும் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கக்கூடிய இடமாக மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், பிள்ளைகளின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆளுமை விருத்திக்காக பாடசாலை விளையாட்டு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், இளைஞர் தலைமுறையினர்  ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளின் பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். அரசியல் என்பது கட்சி அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும், சமூகத்தில் செயற்பாட்டுமிக்க பிரஜைகளாகத் தலையீடு செய்வதும் அதன் முக்கியமானதொரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, இலங்கை பாராளுமன்றத்தின் கட்டமைப்பு, பணிகள் மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.இங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர், பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் சட்டத்திற்கு மதிப்பளிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அரசியல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைக்கு இளைஞர் தலைமுறையினர் செயற்பாட்டுடன் பங்களிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.எந்தவொரு தொழிலையும் கௌரவத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும், ஏனையவர்களின் தொழில்களை மதித்து அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் பிரதி சபாநாயகர் வலியுறுத்தினார்.  சமூகத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மனப்பாங்கில் மாற்றம் அவசியம் எனவும், ஒழுக்கமும் நாகரிகமும் கொண்ட சமூகத்தை உருவாக்குவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.கொழும்பு வலய மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கும் வகையில் சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதுடன், மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். அமைச்சுப் பதவிகளை வகிக்கும் மாணவர்கள் தமது அமைச்சுக்களின் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்தனர்.இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட கௌரவ அதிதிகளின் கரங்களினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஜனாதிபதி செயலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்த நிகழ்வில்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சுபாஷ் ரோஷன கமகே, ஜனாதிபதியின் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, மேல் மாகாண பிரதம செயலாளர் கே.ஜி. பிரதீப் புஷ்பகுமார, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (தொடர்பாடல்) சமந்த மல்லவஆரச்சி, வலயக் கல்விப் பணிப்பாளர் உதென ஹெட்டிஆராச்சி, பிரதி கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ரஞ்சித் பிரேமதிலக்க, பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) ஹசினி விஜய விக்ரம, பிரதி கல்விப் பணிப்பாளர் (பாடசாலை நிர்வாகம்) சாமலி எதிரிசிங்க, உதவிக் கல்விப் பணிப்பாளர் (சமூக விஞ்ஞானம்) ஏ.கே.எஸ்.கே. ரூபதேவ, கொழும்பு கல்வி வலய மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான கலாநிதி கே.டபிள்யூ. கிரிஷான் சிந்தக மற்றும் நதீஷா நிர்மலீ உள்ளிட்டோரும் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-09-30

2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நவம்பர் 12 முதல் டிசம்பர் 14 வரை – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

வரவுசெலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடு ஒக்டோபர் 07ஆம் திகதிவரவுசெலவுத் திட்ட உரை நவம்பர் 12ஆம் திகதி2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு (வரவுசெலவுத் திட்ட உரை/வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தல்) 2026 நவம்பர் 12ஆம் திகதி மேற்கொள்ளப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் அண்மையில் (செப். 25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (25) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீடுக்காக ஒக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2026 நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டை (வரவுசெலவுத் திட்ட உரை) மேற்கொள்வதற்கும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, நவம்பர் 20ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.அதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, சனிக்கிழமைகள் உட்பட அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடைபெறும். அத்துடன், இந்த அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் மு.ப 9.30 மணிக்கு கூடவுள்ளது.அதற்கமைய, அனைத்து நாட்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான 5 கேள்விகளுக்கும், மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.00 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஒரு கேள்விக்குமாக நேரம் ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, விவாதம் மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை நடைபெறவுள்ளது. வாக்கெடுப்புகள் நடைபெறும் இரண்டு நாட்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் 50:50 என்ற விகிதாசார அடிப்படையில்  ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைகள் மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.மேலும், இரண்டாம்  மதிப்பீடு மீதான விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 60 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 40 சதவீதமும் என்ற அடிப்படையிலும், குழுநிலை விவாதக் காலப்பகுதியில் அரசாங்கத் தரப்புக்கு 40 சதவீதமும் எதிர்க்கட்சிக்கு 60 சதவீதமும் என்ற அடிப்படையிலும் நேரத்தை ஒதுக்குவதற்கு இங்கு  இணக்கம் காணப்பட்டது.அத்துடன், அமைச்சொன்றின் செலவினத் தலைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு கோரப்பட்டால், அது குறித்த தினத்தின் இறுதியில் பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2026-09-25

அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார்அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு இன்று (செப். 24) சான்றுரைப்படுத்தினார்.அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்று (24) மற்றும் இன்று (25) ஆகிய இரு தினங்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்று, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் ஊடாக உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் திருத்தப்படுகிறது.அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையும் திருத்தப்படுகிறது. இதற்கு அமைய,  பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவை குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமாக அமுலுக்கு வருகிறது.இதேவேளை, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலத்திலும் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நேற்றையதினமும் இன்றையதினமும் இடம்பெற்று, மேலதிக வாக்குகளால் இச்சட்டுமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயது 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நீதித்துறை திருத்தச் சட்டமூலத்திலும் 4ஆம் பிரிவைத் திருத்துவதன் மூலம், மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்களையும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களையும் நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு அமைய, நீதித்துறை (திருத்தம்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க நீதித்துறை (திருத்தம்) சட்டமாக அமுலுக்கு வருகிறது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks