பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2011 ஆம் ஆண்டிற்கான பாதூகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி
(ii) 2012 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை
(iii) 2012 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
(iv) 2012 ஆம் ஆண்டுக்கான மத்திய சுற்றாடல் அதிகார சபை
(v) 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான மன்றம்
(vi) 2012/13 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்ட செயலகம்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்ட செயலகம்
(x) 2013 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்ட செயலகம்
(xi) 2013 ஆம் ஆண்டுக்கான தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு
குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் உரிமைகளையும் உரித்துடைமைகளையும் எடுத்துக்கூறுவதற்கும், அத்தகைய உரிமைகளையும் உரித்துடைமைகளயும் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும்; குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புத் தொடர்பாகத் தோதான சர்வதேச மரபுகளுக்கும், நியமங்களுக்கும், மிகச் சிறந்த செயல்முறைகளுக்கும் பயன்கொடுப்பதற்கும்; குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகாரசபையைத் தாபிப்பதற்கும்; குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளனதும் முகாமைச் சபையொன்றையும் இலங்கைப் பொலிசுத் திணைக்களத்தின் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளிற்குமான உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவையும் அமைப்பதற்கும்; குற்றச்செயல் களுக்குப் பலியாக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு செலுத்துவதற்கும்; குற்றச்செயல்களுக்கும் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளைினதும் உதவி மற்றும் பாதுகாப்பு நிதியத்தைத் தாபிப்பதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ நீதி அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் கட்டளை
அதனையடுத்து, 1623 மணியளவில் பாராளுமன்றம் 2014 செப்டெம்பர் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks