E   |   සි   |  

சபை அலுவல்கள்


திரு. ஹரின் பர்னாந்து அவர்கள் கேட்டு விலகியுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக கெளரவ கருப்பையா வேலாயுதம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக கெளரவ பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2013 ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்டச் செயலகத்தின் செயற்திறன் அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்

(ii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனம்
(iii) 2008 ஆம் ஆண்டிற்கான இலங்கை போக்குவரத்து சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

‘விசேட வழக்குத் தொடுநர்’ எனப்படும் பதவியொன்றை உருவாக்குதல்

அரச சேவை அரசியல் தலையீடுகளிலிருந்து  விலக்குவதற்காக சுதந்திர ஆணைக்குழுக்கள், அரசாங்க கணக்குக் குழு, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றினால் நிறுவனங்களில் செயற்றிறமை பாதிக்கின்ற மோசடிகள், ஊழல்கள், செயற்திறமையில்லாமை ஆகியவற்றை கண்டுபிடித்த உடனே பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக  அவற்றுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படுவதற்கு ‘‘விசேட வழக்குத் தொடுநர்” எனப்படும் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தல் தொடர்பான சட்டங்களை வகுத்தல்

வீடுகளில் அல்லது விற்பனை செய்வதற்காக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை உள்ளூராட்சி நிறுவனங்களில் பதிவு செய்யத் தேவையான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்பதோடு, குறித்த பிராணிகளின் குட்டிகளை, சட்டரீதியான அனுமதி பெற்ற நிலையங்களில் மாத்திரம் விற்பனை செய்தல் வேண்டுமெனவும் அவ்வாறல்லாத இடங்களில் வளர்க்கப்படும் பெண்ணினப் பிராணிகளை கட்டாயமாக மலடாக்கலுக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்டங்கள் வகுக்கப்படவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல்

அம்பாறை மாவட்டத்தில் அருகி வரும் பாரம்பரிய கைத்தொழில்களான கைத்தறித் தொழில், மட்பாண்டம் தயாரித்தல், பனை ஓலை மற்றும் பன்கொண்டு பெட்டி, தண்டு மற்றும் பாய் போன்றவற்றை இழைத்தல், தும்புத் தொழில், பிரம்புத் தொழில் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து அப்பகுதி மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய நட்டஈட்டு வழக்குகளுக்கு சுருக்கமுறை நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தல்

மோட்டார் வாகனங்களுடன் தொடர்புடைய திடீர் விபத்துகளினால் உயிரிழந்த ஆட்களின்  வாரிசுகளுக்கும்  தங்கிவாழ்வோருக்கும், அவ்வாறான விபத்துகளினால் காயமடைந்த ஆட்களுக்கும் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு மிகச் சிரமமானதும் நீண்டதுமான நீதிமன்ற செயற்பாடொன்றில் பங்குபற்ற நேர்ந்துள்ளதால் அவர்கள் மிகவும் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்படுவதனால், மோட்டார் வாகனங்கள் தொடர்பான நட்டஈட்டு வழக்குகளுக்கு சுருக்கமுறை நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தும் வகையில் குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 134 முதல் 138 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) பியசேன கமகே மன்றம் (கூட்டிணைத்தல்)
(ii) போதிராஜாராம கல்வி மற்றும் கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்)
(iii) வசந்த சேனாநாயக்க மன்றம் (கூட்டிணைத்தல்)
(iv) இலங்கையில் றோமன் கத்தோலிக்க அதிமேற்றிராணியார், மேற்றிராணியார் (திருத்தம்)
(v) ஜோன் செனவிரத்ன மன்றம் (கூட்டிணைத்தல்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதல்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஆகஸ்ட் 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks