பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசிறை முகாமைத்துவப் (பொறுப்புச்) சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை 2014
(ii) 2013 ஆம் ஆண்டிற்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் திறைசேரிச் செயற்பாடுகள் திணைக்களம்
(iii) 2013 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி நிதித் திணைக்களம்
(iv) 2013 ஆம் ஆண்டிற்கான இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்
(v) 2013 ஆம் ஆண்டிற்கான தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவத் திணைக்களம்
(vi) 2013 ஆம் ஆண்டிற்கான பெளத்த மத அலுவல்கள் திணைக்களம்
(vii) 2013 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற எதிர்கட்சி முதல்வர் அலுவலகம்
(viii) 2013 ஆம் ஆண்டிற்கான கமத்தொழில் அமைச்சு
(ix) 2013 ஆம் ஆண்டிற்கான இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம்
(x) 2013 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xi) 2011 ஆம் ஆண்டிற்கான றுஹுண பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்)
இலங்கையில் உளதாயிருந்த ஆயுதந்தாங்கிய பயங்கரவாதக் குழுவொன்றின் செயற்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் தமது உரிமைகளைத் தொடருவதற்கு அல்லது தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இயலாதிருக்கின்ற ஆட்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்கள் ஆகியவற்றை இயலச் செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பாராளுமன்றச் சபை முதல்வர் அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ மனுஷ நாணயக்கார அவர்களுக்கு “பேர்ட்டி திஸாநாயக்க மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக சேவைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
சபையால் நிறைவேற்றப்பட்டன.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“காலி, மேல் டிக்சன் வீதியை மூடல்” எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1905 மணியளவில் பாராளுமன்றம் 2014 ஜூலை 23ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks